வீட்டில் இருக்கும் பெண்கள் குளிக்காமல் இந்த ஒரு வேலையை மட்டும் செய்யவே கூடாது. லட்சுமி கடாட்சம் வீட்டை விட்டு வெளியேற, வீட்டில் தரித்திரம் குடியேற இதுவும் ஒரு காரணம் தான்.

women4
- Advertisement -

வீட்டில் மகாலட்சுமி அம்சம் பொருந்திய பெண்கள் காலையில் எழுந்த உடனேயே முதலில் குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். குளிக்காமல் இருந்தால் முதலில் நம்முடைய உடம்பில் சோம்பேறித்தனம் குடியேறி இருக்கும். சோம்பேறித்தனம் குடியேறி விட்டால், நமக்குள் மூதேவி குடியேறி விடுவாள். மூதேவி குடியேறி விட்டால் தானாக தரித்திரம் நம்மை வந்து அடைந்து விடும். எல்லா வேலையிலும் சோம்பேறித்தனத்தை காட்டுவோம். வேலைகளை சரிவர செய்ய மாட்டோம். தானாக வீட்டில் இருக்கும் லட்சுமிதேவி வெளியேறிவிடுவாள். பெண்கள் முதலில் காலையில் எழுந்து குளித்துவிட்டு உங்களுடைய வேலையை தொடங்குவதுதான் நல்லது.

women8

சரி, காலையில் எழுந்து சூழ்நிலை காரணமாக உங்களால் குளிக்க முடியவில்லை. சமைத்து முடித்த பின்புதான் குடிப்பீர்கள் என்றால் உங்களுடைய சமையலில் சாம்பார் குழம்பு ரசம் பொரியல் இப்படி எதை வேண்டும் என்றாலும் குளிப்பதற்கு முன்பு செய்துவிடுங்கள். காலை உணவை கூட குளிப்பதற்கு முன்பு சமைத்து விடுங்கள். அதன்பின்பு போய் குளித்துவிட்டு, வந்து மதிய நேரத்திற்கு தேவையான சாதத்தை வடிக்க வேண்டும்.

- Advertisement -

சில வீடுகளில் நீங்களே கவனித்துப் பாருங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் குளிப்பதற்கு முன்பு எல்லா வேலையும் முடித்து விடுவார்கள். ஆனால் குளித்துவிட்டு வந்து சாதத்தை அடுப்பில் வைத்து சாதம் வடிப்பாங்க. நிறைய பேர் வீடுகளில் இந்த பழக்கம் உள்ளது.

clay-pot-cooking

குளிக்காமல் எந்த வீட்டில் சாதம் வடிக்கப்படுகின்றதோ, அந்த வீட்டில் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் பண கஷ்டம், மனக் கஷ்டமும், கடன் சுமையும் இருந்து கொண்டு வரத்தான் செய்யும். வீட்டில் தரித்திர நிலைமை நிலவும்.

- Advertisement -

வீட்டில் இருக்கக் கூடிய பெண்மணி குளித்துவிட்டு சுத்தமாக அரிசிப் பானையில் இருந்து அரிசியை எடுத்து சாதத்தை வடித்து, வடித்த சுடு சாதத்தில் நெய் ஊற்றி இறைவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு அதன் பின்பு உணவு சாப்பிடும் பழக்கத்தை வைத்திருக்கின்றாளோ, அந்த வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சத்திற்கு ஒருபோதும் குறைபாடு இருக்கவே இருக்காது. இது நிதர்சனமான உண்மை.

women7

கூடுமானவரை பெண்கள் காலையில் எழுந்த உடனேயே முதலில் குளித்து விடுங்கள். அதன் பின்பு நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு, பூஜை அறைக்குள் சென்று தீபமேற்றி வைத்து விட்டு இறைவனை வணங்கிவிட்டு அதன்பின்பு வந்து சமையலை தொடங்குவதுதான் நல்லது. இதை தான் நம்முடைய சாஸ்திரமும் சொல்லுகின்றது. இதைத்தான் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்களும் பின்பற்றி வந்தார்கள். காசு பணம் குறைவாக இருந்தாலும் அவர்கள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். இப்படி செய்தால் நம்மை அறியாமலேயே நம்முடைய உடம்பிற்குள் ஒரு நேர்மறை ஆற்றல் உருவாகிவிடும். அந்த நேர்மறை ஆற்றல் நம்முடைய உடம்பில் சோம்பேறித்தனத்தை தங்க விடாது. சோம்பேறித்தனமும் தரித்திரமும் இல்லாத இடத்தில் மகாலட்சுமி தானாகவே வந்து குடி கொண்டுவிடுவாள்.

காலையில் எழுந்தவுடன் குளிக்கும் பழக்கம் உங்களிடம் இல்லை என்றால், நாளை முதல் ஒரு பதினோரு நாளைக்கு காலையில் எழுந்து குளித்துவிட்டு உங்களுடைய வேலையை தொடங்கி பாருங்களேன். உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்களே எதிர்பார்க்காத நிறைய நல்ல விஷயங்கள் நடக்க தொடங்கும். உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும். அதன் பின்பு நீங்களே நினைத்தால் கூட காலையும்  குளிக்காமல் உங்களால் தினசரி வேலையைத் தொடங்கவே முடியாதுங்க. ட்ரை பண்ணி பாருங்க. காலையில் குளியலில் இருக்கக்கூடிய ரகசியத்தை அப்போதுதான் உங்களால் புரிந்து கொள்ள முடியும். சாத்திரங்கள் என்றுமே பொய்யானது இல்லை என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -