குங்குமம் வீட்டில் இப்படி இருக்கவே கூடாது. உங்களுடைய வீட்டில் கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

kungumam-kumkum
- Advertisement -

மங்களகரமான விசேஷங்களில் முதலிடத்தில் இருப்பது இந்த குங்குமம். குங்குமத்தை வீட்டில் எப்படி வைக்கணும், எப்படி வைக்கக்கூடாது என்பதைப் பற்றியும், குங்குமத்தை முறையாக ஒரு வீட்டில் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் ஒரு சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அம்மனுக்கு உகந்த, லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த குங்குமத்தை அலட்சியமாக கையாளுபவர்கள் உடைய வீட்டில் நிச்சயமாக ஏதாவது ஒரு மனக்குறையான கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த குறிப்புகளை படித்து பயன்பெறலாம்.

நம்மில் நிறைய பேருக்கு தெரியும் குங்குமத்தை கீழே கொட்ட கூடாது. அது அபசகுனம் என்று சொல்லுவோம். அபசகுனம் என்று பயப்படுவதை விட, குங்குமத்தை கையில் எடுக்கும்போதே பயபக்தியோடு, அதாவது குங்குமம் ஒரு மங்கலகரமான பொருள், இதை பத்திரமாக எடுக்க வேண்டும் என்று நினைத்து எடுக்க வேண்டும். அலட்சியப் போக்கில் குங்குமத்தை கையிலெடுத்து அடிக்கடி கீழே தவற விடக்கூடாது.

- Advertisement -

அடுத்தபடியாக சில வீடுகளில் குங்குமத்தை பயன்படுத்தும் போது கீழே சிந்திக் கொண்டே இருப்பார்கள். நெற்றியில் வைத்தாலும் குங்குமம் கீழே விழும். பூஜை ஜாமான்களுக்கு  குங்குமம் வைத்தாலும் கீழே விழும். நிலை வாசல் படிக்கு பொட்டு வைத்தாலும் குங்குமம் கீழே விழத்தான் செய்யும். ஆனால் அந்த குங்குமத்தை காலில் மிதி படுவதற்கு முன்பு ஒரு துணியை வைத்து துடைத்துவிட வேண்டும். துடைப்பத்தை கொண்டு கீழே சிந்திய குங்குமத்தை கூட்ட கூடாது.

கோவிலில் இருந்து பேப்பரில் மடித்து கொண்டு வந்த குங்குமத்தை ஆங்காங்கே அப்படியே குப்பை போல போட்டு வைக்கக்கூடாது. கோவில் குங்குமத்தை தினம்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்ளக் கூடிய குங்குமத்தோடு கலக்கவேண்டும். விபூதியும் குங்குமமும் கலந்துவிட்டது என்றால் அதை எடுத்துப் போட மனமில்லாமல் வீட்டிலேயே ஒரு மூலையில் போட்டு வைக்கக்கூடாது. ஏதாவது ஒரு செடி கொடிகளுக்கு கீழே அதை கொட்டி விடலாம்.

- Advertisement -

குங்குமத்தை போட்டு வைத்திருக்கக்கூடிய டப்பாவை பார்த்துக்கொண்டே இருங்கள். அதாவது வாரம் ஒரு முறையோ இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அந்த குங்குமத்தை கவனிக்க வேண்டும். குங்குமம் வண்டு பிடித்தபடி பூசனம் பிடித்தபடி இருக்கக்கூடாது. குங்குமத்தில் இரண்டு கற்பூர துண்டுகளைப் போட்டு வைத்தால் அந்த குங்குமத்தில் வண்டு பிடிக்காமல் இருக்கும்.

நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண் பிள்ளைகளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்கக் கூடிய பழக்கம் இருந்தாலும், குங்குமம் வைப்பதில் இருக்கக்கூடிய மகத்துவத்தை சொல்லிக்கொடுங்கள். ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் கோவில்களுக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது கொஞ்சம் குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளக்கூடிய பழக்கத்தை சொல்லிக் கொடுப்பது நல்லது. எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கை என்று இன்றைக்கு மாற்றி விட்டதால் தான், பல பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த சம்பிரதாயங்களை பின்பற்றி வாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -