நாம் இட்டுக்கொள்ளும் குங்குமத்தின் சக்தியை பன் மடங்கு அதிகரிக்க செய்து, அது நம்மை என்றென்று காத்துநிற்க இதை செய்யுங்கள்.

kungumam-kumkum
- Advertisement -

நமது பாரம்பரிய வழிபாடுகளில் இறைவனுக்கு படைக்கப்பட்ட பொருட்களை நாம் பிரசாதமாக பயன்படுத்துகின்றோம். அத்தகைய தெய்வீக பிரசாதங்களில் முக்கியமானதாக குங்குமப் பிரசாதம் திகழ்கிறது. திருமணமான பெண்களுக்கு தெய்வீக அழகைக் கொடுக்கும் இந்த குங்குமம் பற்றியும், அந்தக் குங்குமத்தை பெண்களும், ஆண்களும் முறைப்படி எப்படி இட்டுக்கொள்வது என்பதை குறித்தும், குங்குமத்தின் சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பது குறித்த விவரங்களையும் இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

kungumam

சிவபெருமானுக்கு அவரது நெற்றியில் திருநீறு எப்படி அழகு சேர்க்கின்றதோ, அதுபோல அவரின் சரி பாதியான அம்பாளுக்கு அவரின் நெற்றியில் இருக்கும் குங்குமம் அழகை சேர்க்கிறது. எந்த ஒரு பெண்ணுக்கும் அவரது நெற்றியில் குங்குமம் வைப்பதால், அப்பெண்ணின் அழகு மேன்மேலும் கூடும். குறிப்பாக திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் இடுவதை தவிர்க்கக்கூடாது.

- Advertisement -

பொதுவாக கோயில்களில் இறை வழிபாட்டிற்கு பிறகு தரப்படும் குங்குமப் பிரசாதத்தை திருமணமான பெண்கள் கைகளை நீட்டி வாங்கும் பொழுது, தாங்கள் அந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்ட பிறகே பிறருக்கு அந்த குங்குமத்தை பிரசாதமாக கொடுக்க வேண்டும். மேலும் குங்குமப் பிரசாதத்தை வாங்கும் பொழுது வலது கையில் இருந்து இடது கைக்கு அந்த குங்குமத்தை மாற்றி, அதன் பிறகு அந்த குங்குமத்தை வலது கை விரல்களால் தொட்டு நெற்றியில் இட கூடாது. வலது கையில் வாங்கும் குங்குமப் பிரசாதத்தை வலது கை மோதிர விரலை, வலது உள்ளங்கை நோக்கியவாறு வளைத்து, குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

kungumam

திருமணமான பெண்கள் தினந்தோறும் தங்களின் நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும். செயற்கை இரசாயனங்களை தவிர்த்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை பெண்கள் இட்டுக் கொள்ள வேண்டும். தங்கள் வீடுகளுக்கு வருகை தருகின்ற சுமங்கலிப் பெண்களுக்கு நெற்றியில் இட்டுக்கொள்ள குங்குமப் பிரசாதத்தை கட்டாயம் வழங்க வேண்டும். இதனால் குங்குமத்தை அளிக்கும் பெண் மற்றும் குங்குமத்தை அணிந்து கொள்ளும் பெண் ஆகிய இருவருக்கும் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்று சாஸ்திர விதி கூறுகின்றது.

- Advertisement -

“மங்களங்களுக்கெல்லாம் மங்களம் அளிப்பதாயும்
இங்கு நோய் விஷங்கள் தீமை எல்லாமும் ஒழிப்பதாயும்
சங்கரி லலிதா தேவி தாயுருவாயும் உள்ள
குங்குமம் தரிப்பவர்க்கு குறையற நன்மையாமே”

என்கிற ஸ்லோகத்தை துதித்து பெண்கள் குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பொதுவாக நெற்றியின் புருவ மையம், தலை வகிடு மற்றும் திருமாங்கல்யம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே பெண்கள் குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும். நெற்றி மற்றும் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்ளும் பெண்களை “பிரம்மராட்சசம்” எனப்படும் துஷ்ட சக்தி ஒரு போதும் அண்டாது. பெண்கள் நெற்றியில் குங்குமத்தை தவறாமல் இட்டுக்கொள்வதால் ஜன வசியம் ஏற்படும். ஆன்ம பலம் கூடும். மகாலட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும்.

குங்குமத்தின் சக்தியை அதிகரிக்க:
பொதுவாகவே குங்குமத்திற்கு ஆன்மீக ரீதியாக சில சக்திகள் உண்டு என்றாலும் அம்மன் குங்குமத்திற்கு அதீத ஆற்றல் உண்டு. உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் – அம்பாள் கோயிலுக்கு சென்று, அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு, அந்த குங்குமப் பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வந்து, அதிலிருந்து குங்குமத்தை எடுத்து தினமும் வைத்துக்கொள்வதன் மூலம் அதன் சக்தி அதிகரிக்கும்.

kunguma-archanai

ஒரு சிலரால் கோவிலுக்கு செல்ல இயலாது. அது போன்றவர்கள் உங்கள் வீட்டின் பூஜை அறையில் வெள்ளிக்கிழமையில் அம்பாளின் ஏதவது ஒரு சிறிய சிலையையோ புகைப்படத்தையோ வைத்து அதற்க்கு உங்கள் கையால் 108, 1008 இப்படியான எண்ணிக்கையில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை நீங்கள் இட்டுக்கொள்ளலாம்.

சில ஊர்களில் உள்ள “ஓம் சக்தி” கோவில்களில் சாதாரண மக்களே அம்மனுக்கு அபிஷேகம் முதல் அர்ச்சனை வரை அனைத்தையும் செய்யும் வழக்கம் உண்டு. அது போன்ற கோவில்களில் நீங்களே உங்கள் கையால் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை வீட்டிற்கு கொண்டுவந்து பயன்படுத்தலாம். இது போன்ற குங்குமத்தை ஆண்களும், பெண்களும் நெற்றியில் இட்டுக் கொள்வதால் வீட்டில் சகலவிதமான ஐஸ்வர்யங்களும் பெருகும்.

kungumam

குங்குமத்தை திருமணமான பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் தங்கள் நெற்றியில் இட்டுக் கொள்வது நல்லது. குறிப்பாக ஆண்கள் தங்கள் இரு புருவங்களுக்கு இடையேயான நெற்றிப்பொட்டில் அம்பாளின் பிரசாதமான குங்குமத்தை இடுவதால் எதிர்பாராத ஆபத்துகள் ஏற்படா வண்ணம் அம்பாளின் அந்த குங்கும பிரசாதம் அவர்களைக் காக்கும்.

- Advertisement -