இது மட்டும் உங்க கையில இருந்தா போதும் மேக்கப் போடாமலேயே மேக்கப் போட்ட மாதிரி ஜொலிப்பீங்க. இத தெரிஞ்சிகிட்டா திடீர்னு ஒரு பங்க்ஷன் போகனும்னா கூட சட்டுனு சூப்பரா ரெடி ஆயிடலாம்.

beauty tips
- Advertisement -

இப்போதெல்லாம் முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள எத்தனையோ வித அழகு சாதனங்கள் வந்து விட்டது. அதே போல் முகத்திற்கு பூசுவதற்கு எண்ணற்ற கிரீம்கள் கிடைக்கிறது. இது மட்டும் இன்றி விசேஷங்களுக்கு போக வேண்டுமானால் இதற்கென அழகு நிலையம் சென்று அதிகமான பணத்தை செலவு செய்தும் அழகாக்கி கொள்கிறார்கள்.

இனி இப்படி எல்லாம் அழகிற்காக அதிகமாக மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் அதிகமான செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் கிரீம் உடன் இதை சேர்த்து முகத்திற்கு போட்டுப் பாருங்கள். மேக்கப் போட்டால் கூட உங்க முகம் இவ்வளவு பளப்பளப்பாக இருக்காது. அப்படி ஒரு பளிச்சென்ற முக அழகு கிடைக்கும்.

- Advertisement -

முகத்தை சட்டுன்னு அழகாக மாற்றக் கூடிய அந்த சீக்ரட்டான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக:
நீங்கள் முகத்திற்கு எந்த ஒரு ஃபேர்னஸ் கிரீம் போடுவதாக இருந்தாலும் அதை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துக் கொள்ளும் கிரீமில் பாதி அளவிற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ளுங்கள். இதற்கு கடைகளில் விற்கும் கற்றாழையை தான் பயன்படுத்த வேண்டும். இயற்கையான முறையில் உள்ள கற்றாழையை பயன்படுத்த வேண்டாம்.

இவை இரண்டையும் ஒன்றாக கலக்க கொஞ்சமாக ரோஸ் வாட்டர் அனைத்தையும் சேர்த்து கலந்தால் வெள்ளை நிறத்தில் நல்ல ஒரு கிரீம் பதத்திற்கு வந்து விடும். இதன் பிறகு உங்கள் முகம், கை, கழுத்து என அனைத்து இடத்திலும் தேய்த்து இதை விடுங்கள். அதன் பிறகு ஐந்து நிமிடம் விட்டால் போதும் உங்க முகம் மேக்கப் போட்டது போல பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -

இந்த கிரீமை போட்ட பிறகு நீங்கள் வேறு எந்த அழகு சாதன பொருளையும் பயன்படுத்த வேண்டாம். வேண்டுமானால் கொஞ்சமாக பவுடர் மட்டும் போட்டு கொள்ளுங்கள்.

இது மிக மிக எளிமையான ஒரு குறிப்பு தான். திடீரென வெளியில் கிளம்பும் போது மேக்கப்பிற்கு என தனியாக எதையும் செய்யாமல் இந்த ஒரு கிரீமை மட்டும் தயார் செய்து முகத்தில் போட்டுக் கொள்ளுங்கள் முகம் பளிச் சென்று இருக்கும். இது கருந்திட்டு, சன் டென் போன்றவை உங்கள் முகத்தில் இருந்தால் அதை கூட மறைத்து விடும். அது மட்டும் இன்றி முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவை கூட மறைந்து முகம் நல்ல பளப்பளப்பாக மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: காசு செலவு பண்ணாம நடிகை போல மேனி பளபளக்க ஈஸியான 10 புதிய டிப்ஸ் இதோ!

இந்த எளிமையான டிப்ஸை பயன்படுத்தி பாருங்க. இத்தனை நாள் இது தெரியாம இவ்வளவு செலவு பண்ணிட்டோம்மேன்னு கண்டிப்பா பீல் பண்ணுவீங்க. அப்படி ஒரு அருமையான பியூட்டி டிப்ஸ் இது கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.

- Advertisement -