300 ஆண்டுகளாக ஆற்று வெள்ளத்தை கிழித்தெறியும் முருகன் கோயில் – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்

Aavidiyar-temple2
- Advertisement -

தமிழகத்தில் உள்ள எத்தனையோ கோவில்களில் எண்ணிலடங்கா பல அதிசயங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்டு இன்று வரை எத்தனையோ வெள்ளத்தாலும் அசைக்க முடியாத ஒரு அற்புதமான முருகன் கோவில் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

murugan

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னக்காயல் என்னும் ஊருக்கு அருகே கடலில் கலக்கிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்றிற்கு நடுவில் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு அற்புதமான முருகன் கோவில் வடிவமைக்க பட்டது. திருநெல்வேலியில் உள்ள குறுக்குத்துறை என்னும் பகுதியில் இந்த கோவில் அமைக்கப்பட்டதால் இது குறுக்குத்துறை முருகன் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

- Advertisement -

ஆற்றிற்கு நடுவில் கோவில் அமைப்பதால் எப்பேர்ப்பட்ட வெள்ளம் வந்தாலும் கோயிலிற்கு எந்த ஒரு சேதமும் ஏற்படக்கூடாது என்பதை மனிதில் கொண்டு தெள்ள தெளிவான திட்டமிடலுடன் அந்த காலத்திலேயே கட்டப்பட்டுள்ளது இந்த கோவில்.

Murugan temple

இந்த கோவிலின் மூலவரான முருக பெருமான் இந்த ஆற்றில் சுயம்புவாக தோன்றியதால் அவரை சுற்றி கோவில் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆற்றில் எப்போதெல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த கோவில் முழுவதும் வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கையான ஒரு விடையம்.

- Advertisement -

Murugan temple

வெள்ளப்பெருக்கு சமயங்களில் பொதுவாக சுமார் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் உருண்டோடும். அப்போது கோவில் முழுவதும் நீரில் மூழ்கிவிடும். ஆகையால் வெள்ளக்காலத்தில் கோவிலில் உள்ள உற்சவர் சிலை, உண்டியல் போன்றவை கரையில் அமைந்துள்ள மேலக்கோயிலில் வைக்கப்படும். ஆனால் மூலவர் சிலை மட்டும் கோவிலிலேயே இருக்கும்.

Murugan temple

வெள்ள நீர் வடிந்த பிறகு கோவிலை சுத்தம் செய்து பின் உற்சவர் சிலையை மீண்டும் கோயிலிற்கு கொண்டுவருவது வழக்கம். இந்த கோவில் எப்பேர்ப்பட்ட வெள்ளத்தையும் சமாளிக்க காரணம் இந்த கோவிலின் கட்டமைப்பே. படகின் முன் பகுதி நீரை கிழித்து செல்ல எப்படி கூர்மையாக இருக்கிறது அதுபோல இந்த கோவில் கூர்மையாக அமைக்கப்பட்டுள்ளது.

Murugan temple

இதையும் பார்க்கலாமே:
கோயிலிற்கு வந்து சிவனை வழிபட்ட நாகம் – வீடியோ

எத்தகைய வெள்ளத்தையும் தாங்கும் இந்த கோவிலும் இங்குள்ள மூலவர் சிலையும் உண்மையில் ஆச்சர்யத்தின் உச்சம் தான். நவீன கால பொறியாளர்களும் இந்த கோவிலின் கட்டுமானத்தை கண்டு இன்றுவரை பிரமிப்படைகின்றனர்.

- Advertisement -