KYC என்றால் என்ன? | Kyc full form in Tamil

kyc full form in Tamil
- Advertisement -

Kyc தமிழ் விரிவாக்கம் | KYC meaning in Tamil

நாம் எல்லோருமே இந்த kyc என்கிற வார்த்தையை வங்கிகளில் பயன்படுத்தப்படுவதை கேட்டிருப்போம் அந்த KYC என்றால் என்ன? அது எதற்கு பயன்படும், KYC என்பதன் விரிவாக்கம் என்ன? (Kyc full form in Tamil) என்பன போன்ற முழுமையான தகவல்களை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

Kyc full form in Tamil

Kyc என்கிற வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் know your customer என்பதாகும். பொதுவாக ஒரு வங்கியில் அவர்களின் வாடிக்கையாளர் பற்றி முழு விவரங்களை தெரிந்து கொள்வதற்காக இந்த Kyc ஆங்கில சொல் பயன்படுத்தப்படுகிறது.

- Advertisement -

இந்த kyc சேவை அமைப்பை இந்திய நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது. இந்த முறையின் பிரதான நோக்கம் பிளாக் மணி எனப்படும் கருப்புப் பணத்தை ஒழிப்பது தான். ஒரு வங்கியில் இருக்கின்ற வாடிக்கையாளர் செய்யும் தொழில் என்ன? அவருக்கு பணம் சட்டத்திற்கு புறம்பான முறையில் அல்லாமல் நேர்மையான வழிகளில் தான் வருகிறதா? என்பதை உறுதி செய்ய கொள்ளவும், வங்கியின் சேவைகள் அந்த வாடிக்கையாளர்கள் தவறான வழியில் பயன்படுத்த வில்லை என்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த kyc பயன்படுகிறது.

KYC meaning in Tamil

பொதுவாக ஒரு வங்கியில் வங்கிக் கணக்கைத் தொடங்க, ஒரு வாடிக்கையாளரின் நிரந்தர முகவரி, அவரின் புகைப்படம் மற்றும் அவரின் அடையாளங்கள் குறித்த ஆதாரங்கள் அடங்கிய ஆவண காகிதங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

kyc ஆவணங்கள் – kyc details in tamil

What is KYC in Tamil: kyc க்கு ஆதாரமாக பாஸ்போர்ட், ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் ஒரு அடையாள சான்றை பயன்படுத்தலாம்.

பொதுவாக ஒரு வாடிக்கையாளர் அவர் கணக்கு தொடங்க இருக்கும் வங்கியில், அவரின் நிரந்தர முகவரி சான்றுகளை அளித்தால், மற்ற ஆதாரங்களுக்கு தேவை ஏற்படாது. எனினும் தற்காலிக முகவரியில் அவர் தங்கியிருந்தால், முகவரி ஆதாரத்துடன் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

kyc ல் முகவரிக்கு தேவையான அடையாள ஆவணங்களாக – kyc documents list in Tamil:

Kyc meaning in Tamil: மின்சார கட்டண ரசீது, தொலைபேசி கட்டண ரசீது, எரிவாயு சிலிண்டர் ரசீது, ரேஷன்கார்டு ரசீது ஆகியவற்றை kyc ல் முகவரிக்கான ஆவணங்களாக சமர்ப்பிக்கலாம்.

What is Kyc in Tamil

இந்தியாவில் 1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு – இ ன் படி ஒரு வாடிக்கையாளரின் முகவரி மற்றும் ஆதார ஆவணங்கள் உண்மைத்தன்மை குறித்து, அவர் கணக்கு தொடங்கவிருக்கும் & தொடங்கியிருக்கின்ற வங்கிகள் சோதனை செய்யலாம் என உரிமை வழங்கப்பட்டுள்ளது.

வங்கியின் வாடிக்கையாளர், அவரின் முகவரி மாற்றம் செய்யப்பட்டால் அது குறித்து அவர் உறுப்பினராக இருக்கும் வங்கிக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த வங்கி அலுவலர்களும் வாடிக்கையாளர்களின் அந்த முகவரியை சரி பார்க்க வேண்டும்.

நம் நாட்டில் வங்கிகள், தபால் அலுவலகங்கள், நிதி மற்றும் வர்த்தகம் சார்ந்த துறைகளில் இந்த kyc வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது.

- Advertisement -