இன்று நவராத்திரி முதல் தொடங்கியது. 9 நாட்களும் கொலு வைத்து வழிபாடு செய்வது என்பது நவராத்திரியின் சிறப்பான வழிபாடு. ஆனால், எல்லோராலும் கொலு வைத்து அம்பிகையை வழிபட முடியாது. உங்களுடைய வீட்டில் கொலு வைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. நாளைலிருந்து தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அம்பிகையிடம் பின் சொல்லக்கூடிய பாடலைப் பாடி, நம்பிக்கையான முறையில் வழிபாட்டை செய்யுங்கள்.
நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் ஒன்பது நாட்களுக்குள் பலிக்கும். அம்பிகையின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். இன்று மாலை 6:00 மணி அளவில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். நவராத்திரி முடியும் வரை 9 நாளும், மாலை 6:00 மணிக்கு விளக்கு ஏற்றி இந்த வழிபாடு செய்ய வேண்டும்.
உங்களால் அம்பிகைக்கு ஏதாவது தானியத்தில் சுண்டல் செய்து வைக்க முடியும் என்றால், 9 நாளும் ஒவ்வொரு வகையாக சுண்டல் செய்து நெய்வேத்தியமாக படைக்கலாம். அதுவும் முடியாது என்றால் இரண்டு வாழைப்பழங்கள் நெய் வைத்தியமாக வைத்துவிட்டு, பூஜையறையில் அமர்ந்து பின் சொல்லக்கூடிய பாடலை படிக்க வேண்டும்.
அம்பாலின் ஆயிரம் நாமாவளியை தான் லட்சுமி சஹஸ்ரநாமம் என்று சொல்லுவார்கள். எல்லோராலும் அந்த லக்ஷ்மி சகஸ்ர நாமத்தை படித்து விட முடியாது. அது சமஸ்கிருதத்தில் இருக்கும். இருந்தாலும் மஹா பெரியவா அவர்கள் இந்த லட்சுமி சஹஸ்ர நாமத்தை சுருக்கி 7 வரிகளாக நமக்கு கொடுத்துள்ளார். அந்த ஏழு வரிகளையும், அந்த ஏழு வரிகளுக்கு உண்டான தமிழ் அர்த்தத்தையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
நீங்கள் அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள். அந்த சமஸ்கிருதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை மட்டும் பூஜை அறையில் அமர்ந்து தினமும் 11 முறை படித்தால் போதும். நிச்சயம் அம்பாளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். நவராத்திரியில் முதல் நாள் உங்களுடைய வேண்டுதலை அம்பாளிடம் சொல்லுங்கள். தினம் தினம் நவராத்திரி முடியும் வரை ஒரே வேண்டுதலை, இந்த பாடலை படித்துவிட்டு அம்பாலிடம் சொல்லுங்கள்.
ஒன்பது நாளும் மாலை 6 மணிக்கு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். உங்களுடைய வேண்டுதல் அம்பாளுடைய செவிகளுக்கு நிச்சயம் எட்டும். நம்முடைய தகுதிக்கு ஏற்ப வேண்டுதல் வைத்தால், வரங்களைக் கேட்டால் நிச்சயம் அந்த வரங்கள் 9 நாட்களில் நமக்கு கிடைக்கும் அதில் ஒரு துளி கூட சந்தேகம் கிடையாது.
ஓம் ஸ்ரீ லலிதா சப்த நாமாவளி
1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
ஓம் சீர்மிகு அன்னையே போற்றி
2. ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
ஓம் அன்னம் அளிப்பாய் போற்றி
3. ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
ஓம் பெரும் செல்வம் மிகத் தருவாய் போற்றி
4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
ஓம் திருமகளும் கலைமகளும் இடப்புறத்தும் வலப்புறத்தும் தாமரைகள் கையேந்தி பணிவிடை செய் பெற்றவளே போற்றி
5. ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
ஓம் கடைக்கண் பார்வைக்கு காத்திருந்து ஏவல் செய்யும் பல கோடி லட்சுமிகள் பரவிட்ட பாதத்தோய் போற்றி
6. ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
ஓம் சிவமும் சக்தியும் இரண்டற கலந்த ஒரு தனித் திருவருளே போற்றி
7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
ஓம் அழகு மிகு லலிதாவாம் அம்பிகையை திகழ்வோளே போற்றி போற்றி !
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் காணாமல் போக கந்தன் வேல் மந்திரம்
இதுதான் அந்த பாடல் வரிகள். குறிப்பாக உங்கள் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளை இந்த பாடலை படிக்கச் சொல்லி, வீட்டில் நவராத்திரி வழிபாடு செய்து பாருங்கள். அந்த அம்பாள் மகிழ்ச்சியுடன் உங்கள் வீட்டிற்கு வந்து, பூஜை அறையில் குடிகொண்டு விடுவாள். இந்த நவராத்திரி நாட்களில் அனைவரது குடும்பத்திலும் சந்தோஷம் பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.