இந்த ஒரு வார்த்தையை அடிக்கடி சொல்லிட்டு இருந்தாலே போதுங்க. பணம் பல தலைமுறைகளுக்கு  உங்கள் குடும்பத்துடனே ஐக்கியமாகி விடும்.

thinking-cash
- Advertisement -

எந்தவொரு பரிகாரத்தையும் ஒருநாள் செய்து பார்த்துவிட்டு, அந்த பரிகாரம் பலன் அளிக்கவில்லை என்று சொல்லிவிடக்கூடாது. பரிகாரத்தை மனப்பூர்வமாக செய்ய வேண்டும். அதே சமயம் அந்த பரிகாரத்தை தொடர்ந்து ஒரு சில நாட்கள் செய்து பார்க்க வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய பரிகாரத்தின் மூலம், உங்களுக்கு கோடி ரூபாய் லாபம் கிடைக்குமா என்று சிந்திப்பதை விட, உங்களுக்கு வரக்கூடிய நஷ்டத்தில் எவ்வளவு குறைகிறது என்பதையும் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். நினைத்தவுடன் மரத்தில் பணத்தை காய்க்க வைக்க நாம் ஒன்னும் மாயாஜால வித்தைகளை செய்வது கிடையாது. பரிகாரங்கள், நம்பிக்கையோடு செய்ய செய்ய தான் பலன் கொடுக்கும்.

cash

அன்றாட வாழ்க்கையில் நாம் கஷ்டப்படுவதே இந்த பணத்திற்காகத் தான். அந்தப் பணத்தை நம்மிடம் தக்க வைத்துக் கொள்வதற்கு நிறையவே பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இன்றும் நாம் ஒரு சுலபமான பணம் சேர்வதற்க்கூடிய பரிகாரத்தை தான் பார்க்கப் போகின்றோம். இது பரிகாரம் கூட கிடையாது இந்த வார்த்தையை நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள். தோன்றும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருங்கள். உங்களுக்கு மட்டும் அல்ல. உங்களுக்கு அடுத்து வரக்கூடிய பல தலைமுறைகள் கூட பணத்திற்கு கஷ்டப்படாமல் இருக்கும்.

- Advertisement -

உங்களிடம் யாராவது பணம் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அதை வாங்கும்போது மனதார ‘லாபம் லாபம்’ என்று சொல்லிக்கொண்டே வாங்க வேண்டும். அதை வாங்கிக் கொண்டு வந்து உங்கள் பீரோவில் வைக்க போகிறீர்கள். பீரோவில் வைக்கும்போது ‘லாபம் வசி வசி’ என்ற வார்த்தையை 3 முறை சொல்லிவிட்டு அந்த பணத்தை உங்களுடைய இரண்டு கண்களிலும் ஒற்றிக்கொண்டு அதன் பின்பு பீரோவில் வைத்து விடுங்கள்.

labam

ஏதோ ஒரு நல்ல விஷயத்திற்காக நல்ல காரியத்திற்காக வெளியே செல்கிறீர்கள். அந்த இடத்தின் பேச்சுவார்த்தை நடக்கின்றது. ஏதோ ஒரு சொத்து வாங்க வேண்டிய வேலையாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த சொத்து பற்றிய விஷயங்களில் விவாதிக்கும் போது, மனதிற்குள் லாபம் லாபம் என்ற வார்த்தையை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த வார்த்தையை சொன்னால் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் அந்த விஷயம் உங்களுக்கு லாபகரமாக முடியும்.

- Advertisement -

மாதம்தோறும் வரக்கூடிய சம்பளத்தை கையில் வாங்குகிறீர்கள். வாங்கும்போதே மனதிற்குள் லாபம் என்ற வார்த்தையை சொல்லிக் கொள்ளுங்கள். சிலபேர் சம்பளத்தை கையில் வாங்கிய உடனேயே அலுத்துக் கொள்வார்கள். இந்த சம்பளம் இந்த மாதத்திற்கு பத்துமா? எப்போதும் போல பற்றாக்குறையாக தான் இருக்கப் போகின்றது. எப்போதும் போல கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை தான் இருக்கும், என்று நினைத்துக்கொண்டே சம்பளப் பணத்தை கையில் வாங்குவார்கள்‌. இது மிகவும் தவறான ஒரு விஷயம். நாம் என்ன எண்ணுகின்றோமோ அதுதான் நம்முடைய வாழ்க்கையாக இருக்கும்.

cash

எந்த சூழ்நிலையில் பணம் கைக்கு வந்தாலும், பணம் வெளியே சென்றாலும், கடன் வாங்கினாலும், கடன் கொடுத்தாலும் லாபம் லாபம் என்ற வார்த்தையை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையே லாபமாக மாறுகிறதா இல்லையா என்று பாருங்களேன். உங்களுக்கு மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -