பெரிய நஷ்டத்தைக் கூட, 48 நாட்களில் சரி செய்து விடலாம்! நஷ்டத்தை, லாபமாக மாற்ற செய்ய வேண்டிய பரிகாரம்.

vinayagar

வாழ்க்கையில் எப்படி, இன்பமும் துன்பமும் கலந்து வருகிறதோ, அதே போல் தான் நாம் செய்யும் தொழிலும், லாபமும் நஷ்டமும் கலந்து தான் இருக்கும். ஆனால் சில பேருக்கு தொழிலில் லாபம் என்பது ஒரு பங்கு கூட வராது, நஷ்டமடைந்து தங்களுடைய சொத்தையே இழந்திருப்பார்கள். சில பேருக்கு வேலைவாய்ப்புகள் சரியாகவே அமையாது. கை நிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்கும். ஆனால் அந்த வேலை ஒரு மாதத்திற்கு கூட நிலைக்காது. ஒரு மாத சம்பளம் கூட வாங்கி இருக்க மாட்டார்கள். அந்த வேலையில் பிரச்சனை வந்து, வேலையை விட்டிருப்பார்கள். இப்படியாக எந்த விதத்தில் பணவரவு வந்தாலும் அது நிலைக்காமல் நஷ்டம் ஆகவே மாறும். உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்படிப்பட்ட நஷ்டங்களையும், சரி செய்ய வேண்டும் என்றால், 48 நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை, இந்த மந்திரத்தை சொல்லி செய்தாலே போதும். அது என்ன பரிகாரம்? என்ன மந்திரம் என்பதை பார்த்து விடலாமா?

vinayagar

பொதுவாகவே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தருபவர் விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். நம்முடைய நஷ்டத்தை ஈடுகட்ட கொஞ்சம் வித்தியாசமாக, விநாயகரை வழிபட போகின்றோம். அதாவது செம்பில் ஒரு புதிய தாம்பூலத் தட்டை வாங்கிக் கொள்ளுங்கள். சிறிய அளவில் இருந்தால் போதும். புதியதாக கடைக்குச் சென்று வாங்கிக் கொள்வது நல்லது. அதை நன்றாக கழுவிவிட்டு, அதற்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து, அதில் குங்குமத்தில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, நெற்றியில் மஞ்சள் பொட்டு வைக்கவேண்டும்.

தவறாக சொல்லி விட்டதாக நினைக்க வேண்டாம். இது தான் சரியான முறை. எல்லோரும் மஞ்சளில் தான் விநாயகரைப் பிடித்து வைப்பார்கள்! என்று குழப்பம் கொள்ளாதீர்கள். விநாயகரை குங்குமத்திலும், பிடித்து வைத்து அவருக்கு நெற்றியில் மஞ்சள் பொட்டு வைத்து, அந்தத் தட்டில் ஒரு தாமரைப்பூவை வைத்து, அதே தட்டில், ஒரு மண் அகல் தீபத்தில் நெய் ஊற்றி, விளக்கு ஏற்ற வேண்டும்.

manjal-pillaiyar

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கவேண்டும். அதன் பின்பாக அடுத்தடுத்தடுத்து வரும் நாட்களிலும், சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பு. அவ்வளவு காலையில் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றால், காலை 8.00 மணிக்கு முன்பாகவே இந்த பூஜையை செய்து முடித்து விடுங்கள்.

- Advertisement -

மனதார, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். தொழிலில் நஷ்டம், கடன் பிரச்சனை, வட்டிகட்டி நஷ்டம், மனக்கஷ்டம், நகை அடமானம் வைத்து நஷ்டம், வேலையில் கஷ்டம், எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட நஷ்டமாக இருந்தாலும் சரி, அதை சரி செய்ய விநாயகரை வேண்டிக் கொண்டு அந்த தீபத்தின் முன்பு பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

வங் சிங் மங்
நங் யங் சிவா
நமசிவாய ஸ்வாஹா!

48 நாட்கள் தொடர்ந்து, இந்த பூஜையை செய்து, 108 முறை தினம்தோறும் இந்த மந்திரத்தையும் உச்சரித்து வாருங்கள். தாமரைப் பூவை வாடிய பின்பு மாற்றிக் கொள்ளுங்கள். தவறொன்றுமில்லை. தாமரைப்பூ கிடைக்காத பட்சத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றினால் போதும். உங்களுக்கு 48 நாட்களும் தொடர்ந்து தாமரைப்பூ கிடைக்குமென்றால் தினம்தோறும் புதியபூவை சாத்லாம். 48 நாட்களும் அதே குங்கும பிள்ளையார் இருக்கட்டும். அகல் தீபத்தில், இருக்கும், திரியை மட்டும், தினம்தோறும் மாற்றிவிட்டு, புதிய திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

Vannimara-pillaiyar1

சிலபேருக்கு லாக்டோன் காரணமாக தங்களுடைய வேலையை இழந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், வாரம் தோறும் வரும் திங்கட்கிழமை அன்று விநாயகர் கோவிலுக்குச் சென்று, ஒரே ஒரு அகல் தீபம், நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றி, மூன்று தோப்புக்கரணம் போட்டு, நல்ல வேலை கிடைக்க வேண்டிக்கொள்ளுங்கள். கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல வேலை கிடைத்த பின்பும், அந்த வேலையில் நல்ல முன்னேற்றம் அடைய இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஆடி மாத பிறப்பன்று குலதெய்வத்தை இப்படி வணங்கினால் உங்கள் குடும்பத்திற்கு யோகம் வரும். அன்றைய நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.