இவற்றை மட்டும் தொடர்ந்து செய்தால் போதும். உங்கள் வீடு எப்பொழுதும் லட்சுமி கடாட்சத்துடனும் பணம், நகை, ஆரோக்கியம் இவற்றிற்கு குறை இல்லாமல் இருக்கும்.

mahalashmi5
- Advertisement -

மகாலட்சுமியின் அருள் வேண்டி பூஜைகள் பலவற்றை மேற்கொள்வதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒன்று நம் மீது விழுந்தாலே போதும். உலகத்திலுள்ள அனைத்து வளங்களும் நம் வீடு தேடி வந்துவிடும். மகாலட்சுமி குடியிருக்கும் வீட்டில் பணத்திற்கும், மனநிறைவிற்கும் எப்பொழுதும் பஞ்சமே வராது. எனவே மகாலட்சுமி தேவியை வீட்டிற்குள் வரவழைப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது வீடுகளில் சில பழக்கங்களை கையாள்வதன் மூலம் லட்சுமி கடாட்சத்தை வீட்டில் நிலைத்திருக்க வைக்க முடியும். அவை என்ன என்பதனை பற்றி இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

mahalashmi1

பச்சை பட்டு உடுத்திய மகாலட்சுமி தேவியின் திரு உருவப் படத்தை வாசலில் மாட்டி வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, பூ மாலை அணிவித்து, கற்பூர ஆராதனை காட்டி வணங்கி வருவதன் மூலம் வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வர முடியும்.

- Advertisement -

அதேபோல் வெள்ளிக்கிழமை தோறும் தூபம் காட்டும்பொழுது தூப பொடியுடன் சிறிதளவு துளசி பொடியையும் ஒன்றாக கலந்து தூபம் போட வேண்டும். இவ்வாறு செய்வதனால் துளசியின் வாசத்திற்கு மகாலட்சுமி தேவி ஈர்க்கப்பட்டு நமது வீடு தேடி வருவார்கள்.

dhupam

சிறிதளவு தண்ணீரில் மஞ்சள், ஜவ்வாது, தசாங்கம் பொடி மற்றும் வேறுசில வாசனை திரவியங்களையும் சேர்த்து கொண்டு அதனை காலை அல்லது மாலை வேளைகளில் தினமும் வீட்டின் மூலைகளில் தெளித்து வர வேண்டும். இவ்வாறு வீட்டினை எப்பொழுதும் நறுமணத்துடன் வைத்திருப்பதும் மகாலட்சுமியை வீட்டிற்குள் வர வைப்பதற்கு ஒரு சிறந்த வழியாக அமையும்.

- Advertisement -

குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருந்தது என்றால் அந்த வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும். கோவிலில் மகாலட்சுமிக்கு படைத்த தாமரை மலரை வீட்டிற்குக் கொண்டு வந்து, அதனை பட்டுத்துணியில் மடித்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்து வந்தால் உங்களிடம் பணம் வரவு அதிகமாக இருக்கும்.

எப்பொழுது ஏதேனும் ஒரு ஊறுகாய் பாட்டில் உங்களது வீட்டில் வைத்திருக்க வேண்டும். ஊறுகாய் குபேரனுக்கு மிகவும் பிடித்த பொருள் என்பதனால் குபேரன் வீட்டிற்குள் நுழைவதால் மகாலட்சுமி தேவியும் சுலபமாக வீட்டிற்குள் வந்து விடுவார்கள்.

mochai

வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் உப்பு மற்றும் மொச்சை பயிறை வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் லட்சுமி கடாட்சத்தை அடைய முடியும். அதேபோல் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி விளக்கு ஏற்றி மகாலட்சுமி தேவியை வணங்கி வந்தாலும் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

mahalashmi

எப்பொழுதும் உங்கள் வீடுகளில் குல தெய்வ வழிபாடும், பித்ருக்களின் வழிபாடும் இடைவிடாமல் செய்து வர வேண்டும். அது மட்டுமல்லாமல் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு மற்றும் மருதாணி இவற்றை தானமாக கொடுப்பதன் மூலமாகவும் மகாலட்சுமி தேவியின் அருளைப் பெறமுடியும். நீங்களும் முடிந்தவரை இங்குள்ள குறிப்புகளை பின்பற்றி மகா லட்சுமியின் அருளைப் பெற வாழ்த்தி விடை பெறுகிறோம்.

- Advertisement -