- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிய பரிகாரம்

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிய பரிகாரம்

- Advertisement -

மகாலட்சுமியை வேண்டி விரும்பி அழைத்தால் மட்டும் போதாது. அந்த மகாலட்சுமி நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் ஒரு சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். உங்கள் வீட்டில் மகாலட்சுமி வந்து தங்க வேண்டுமென்றால் முதலில் வீடு அசுத்தமாக இருக்கக் கூடாது. வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது. எப்போதும் உங்களுடைய வீட்டில் லேசான ஊதுவத்தி வாசம் வீசும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

மகாலட்சுமி நுழைவது இருக்கட்டும் நம்முடைய வீட்டிற்கு யாராவது நபர் உள்ளே நுழைகிறார்கள் என்றால், அவர்களுக்கு நம்முடைய வீட்டில் சிறிது நேரம் அமர வேண்டும், இந்த வீடு பாசிடிவ் எனர்ஜியாக இருக்கிறது, இந்த வீட்டில் இருந்தால் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது, என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அந்த சூழ்நிலை உங்கள் வீட்டில் நிலவி விட்டால் மகாலட்சுமி தானாக வந்து உங்களுடைய வீட்டில் குடியேறி விடுவாள்.

- Advertisement -

அந்த வகையில் மாசி முதல் வெள்ளிக்கிழமையான இன்று, நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் உயர வேண்டும் என்றால், என்ன பரிகாரம் செய்யலாம். இதோ ஒரு எளிமையான வழிமுறை இந்த பதிவில் உங்களுக்காக.

மகாலட்சுமி வீட்டில் நிரந்தரமாக குடியேற பரிகாரம்

மிக மிக எளிமையான பரிகபரிகாரம். உங்கள் வீடு நிரம்ப எல்லா இடங்களிலும் ஒரு சின்ன கண்ணாடி கிண்ணத்தில் சில்லரை காசுகளை போட்டு ஆங்காங்கே வைத்து விடுங்கள். அழகான படுக்கை அறையில் அழகான ட்ரெஸ்ஸிங் டேபிள் எல்லோர் வீட்டிலும் இருக்கிறது. அந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். அதன் மேலே ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஒரு கைப்பிடி சிலரை காசுகளை வைக்க வேண்டும். இப்படி சில்லறை காசுகளை போட்டு வைக்கும் போது “ஸ்ரீம்” என்ற வார்த்தையை சொல்ல வேண்டும்.

- Advertisement -

அழகான வரவேற்ப்பறை இருக்கிறது. வரவேற்புறையில் அழகான டிவியும் இருக்கிறது. அதற்கு பக்கத்தில் ஒரு டேபிள் அதன் மேலே ஒரு அழகான கண்ணாடி கிண்ணத்தில் ஒரு கைப்பிடி சில்லறை காசுகளை போட்டு அதன் மேலே உதிரி, ரோஜாக்களை தூவி “ஸ்ரீம்” என்ற மந்திரத்தை சொல்லுங்கள். அழகான டைனிங் டேபிள் இருக்கிறது. அதில் நடுவே அழகாக ஒரு சின்ன கிண்ணத்தில் சில்லரை காசுகளை போட்டு “ஸ்ரீம்” என்ற வார்த்தையை சொல்லுங்கள்.

அழகான பூஜை அறையில் ஓரமாக ஒரு அலமாரி இருக்கிறது அந்த இடத்தில் இதே போல சிலரை காசுகளை வைத்து ஸ்ரீம் என்ற வார்த்தையை சொல்லுங்கள். சமையலறையிலும் இதே போல சிலரை காசுகளை வையுங்கள். சில்லறை காசுகளில் சில்லறை காசுகள் எழுப்பும் சத்தத்தில் பாசிடிவ் எனர்ஜி அதிகம் இருக்கிறது இது மகாலட்சுமிக்கு பிடித்த சத்தம். மகாலட்சுமிக்கு படித்த இந்த பிஜ மந்திரம் சொல்லி, சில்லறை காசுகளை வீடு முழுவதும் நீங்கள் வைக்கும் போது மகாலட்சுமி உங்கள் வீடு முழுவதும் நிறைவாக அமர்ந்திருப்பாள்.

- Advertisement -

சிலரை காசுகளை ஆங்காங்கே வைத்து சிதற வைக்க கூடாது. அது தவறுதான். ஆனால் இப்படி கண்ணாடி கிண்ணத்தில் அழகாக சிலரை காசுகளை போட்டு வைப்பதன் மூலம் உங்களுடைய வீட்டில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும். இப்படி போட்ட சில்லறை காசுகளை எடுத்து செலவு செய்யலாம். தவறு கிடையாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை பழைய சில்லறை காசுகளை எடுத்துக்கொண்டு போய் தான தர்ம காரியங்களுக்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் அதில் புதிய சில்லரை காசுகளை போட்டு வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய வெள்ளிக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

இதுபோல அழகான சுத்தம் செய்த வீட்டில் சில்லறை காசுகள் ஆங்காங்கே அழகாக இருப்பது ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை பெருசாக உங்களுக்கு தரும். நம்பிக்கை உள்ளவர்கள் இன்று இதை முயற்சி செய்து பாருங்கள். இன்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை பூஜையை நிறைவு செய்துவிட்டு கூட இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்கள் வீட்டில் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்