உங்களுக்கு தனலாபங்கள் பெருக இன்று கட்டாயம் இவற்றை செய்யுங்கள்

lakshmi

தற்கால உலகில் ஒரு நபரின் செல்வச் செழிப்புக்கு அடையாளமாக கருதப்படுவது அவரிடம் இருக்கும் அதிக பணம் மற்றும் தங்கத்தின் சேமிப்பே ஆகும். சமீபத்திய தகவலின்படி இன்னும் சில மாதங்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலையை 30 ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது. இத்தகைய காலங்களில் எதிர்கால பாதுகாப்பிற்கு நமக்கு அதிக பணவரவு நிச்சயம் தேவையானதாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் மற்றும் அதிக தன வரவுகள் இல்லாத நிலையே இருக்கிறது. இவற்றை எல்லாம் தபோக்கி ஒருவருக்கு மிகுதியான பணம் மற்றும் தங்க நகை சேர்மானம் ஏற்படுவதற்கான ஒரு தாந்திரீக வழிபாட்டு முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

money

அக்காலத்தில் ஒருவரிடமும் இருக்கின்ற தங்கம், வெள்ளி, வைரம் போன்ற ஆபரணங்கள், பால் கறக்கும் பசுமாடுகள் போன்றவையே அந்நபரின் செல்வ வளத்திற்கான அளவுகோலாக இருந்தன. வேகமான நவீன ஏகமான இன்றைய காலத்தில் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தங்கம் சேமிப்பு மட்டுமே செல்வத்தின் அடையாளமாக இருக்கின்றன. இவை இரண்டும் உலகில் அனைத்து செல்வங்களின் அம்சமாக இருக்கின்ற ஸ்ரீமகாலட்சுமி உரியவையாகும். ஒருவருக்கு அந்த மகாலட்சுமியின் அருள் இருந்தால் அந்நபருக்கு பணம், தங்கம் போன்றவற்றின் சேகரம் அதிகரித்துக் கொண்டே செல்லும்

செல்வ மகளான ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருளை பெறுவதற்கும் அவருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வதற்கும் ஒரு அற்புதமான நாளாக ஆடி மாதத்தில் வருகின்ற வரலட்சுமி விரதம் தினம் திகழ்கிறது. இந்த தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, உடல் மற்றும் மனத் தூய்மையோடு லட்சுமி தேவிக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்களை மனதுக்குள்ளாவே துதித்து வருவது நல்லது.

வரலட்சுமி பூஜை செய்யப்படும் மாலை வேளையில் உங்களிடம் இருக்கின்றன அதிக மதிப்பு கொண்ட சில 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் அவற்றோடு ஒற்றை ரூபாய் நாணயத்தை உங்கள் வீட்டின் பூஜை அறையில் இருக்கின்ற லட்சுமி தேவியின் படம் அல்லது சிறிய அளவிலான லட்சுமி தேவியின் விக்கிரகத்திற்கு முன்னால் வைக்க வேண்டும். இவற்றுடன் உங்களிடம் இருக்கின்ற தங்க நாணயங்கள் அல்லது ஆபரணங்கள் போன்றவற்றையும் வைக்கலாம்.

gold

- Advertisement -

இதன்பிறகே தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, ஊதுபத்திகளை கொளுத்தி லட்சுமி தேவியின் படத்திற்கு சுற்றிக் காட்டி, பிறகு அங்கு வைக்கப்பட்டிருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கள், தங்க நகை போன்றவற்றிற்கும் சுற்றிக்காட்டி ஊதுபத்திகளை, அதற்குரிய நிலுவையில் வைத்துவிட வேண்டும். பிறகு லட்சுமி தேவிக்குரிய மந்திரங்களை துதித்து, தற்போது உங்களிடம் இருக்கின்ற பணம் மற்றும் நகை போன்றவற்றின் சேமிப்பு பன்மடங்கு உயர்வதற்கு லட்சுமி தேவி அருள் புரியுமாறு வேண்டிக்கொண்டு, அப்பணம் மற்றும் நகைகளின் மீது சிறிது மஞ்சள் மற்றும் குங்குமம் தூவி, பணத்தை உங்கள் பையிலோஅல்லது அலமாரிகளிலோ வைத்துக்கொள்ளலாம். நகைகளை அதற்குரிய பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து விட வேண்டும்.

mahalakshmi

லட்சுமிதேவியின் அருள் கடாட்சம் நிறைந்த இந்த ஆடி மாத வெள்ளிக்கிழமை தினத்தில் மேற்கூறிய தந்திரிக பூஜை முறையை செய்து லட்சுமி தேவியை வழிபாடு செய்பவர்களுக்கு பணவரவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு பணவிரயங்கள் ஏற்படாமல் தடுக்கும். தங்க நகைகள் போன்றவற்றின் சேர்மானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களில் பணமுடை ஏற்படாது.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் தரிசனம் அதிகரிக்கும் கூட்டம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Lakshmi money pooja in Tamil. It is also called as Varalakshmi pooja in Tamil or Lakshmi kadatcham peruga in Tamil or Panam peruga tips in Tamil or Selvam peruga valimuraigal in Tamil.