அத்தி வரதர் தரிசனம் – மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம். ஏன் தெரியுமா?

athi-varadhar
- Advertisement -

உதட்டில் புன்சிரிப்பும், உண்மையான பக்திக்கு கரையும் இதயம் கொண்டவர் தான் நாராயணனாகிய திருமால். அந்த திருமாலின் பல புகழ்பெற்ற கோவில்கள் பாரதத்தில் இருந்தாலும், தென்னகத்தில் மட்டுமே மிகப் பழமையான புகழ்பெற்ற பெருமாள் ஆலயங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்றுதான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில். அக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வைபவம்தான் அத்திவரதர் தரிசன வைபவம் அது குறித்த சில தகவல்களை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

varadharaja perumal

40 வருடங்களுக்கொரு முறை மட்டுமே கிடைக்கின்ற அத்திவரதர் தரிசனம் என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு என்பதால் நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதை தினந்தோறும் காண முடிகிறது.

- Advertisement -

தினந்தோறும் அத்திவரதர் தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தாலும் ஆடி மாதத்தின் மூன்றாம் செவ்வாய்க் கிழமையான இன்று எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் பக்தர்கள் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்து அத்தி வரதர் தரிசனம் செய்ததாகவும், இதனால் பக்தர்கள் வரிசையில் சற்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது எனவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

athi vardhar

எப்போதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் கோயிலாக இருப்பது திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயில். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மிக அதிக அளவில் பக்தர்கள் வருகின்ற ஒரு கோயிலாக அத்திவரதர் அருள் புரியும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மாறியுள்ளது.

- Advertisement -

ஜூலை 1 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையான காலகட்டத்தில் மட்டும் சுமார் 50 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாகவும், இது தினந்தோறும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு என்ற பக்தர்களின் எண்ணிக்கையை காட்டிலும் பன் மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

people

தற்போது நின்ற நிலையில் அருள் புரிகின்ற அத்திவரதரை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கில் தினந்தோறும் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருப்பதாகவும், மேலும் அத்திவரதரின் சயன கோல தரிசனம் கண்டவர்கள் தற்போது நின்ற நிலையில் இருக்கும் அத்திவரதரின் தரிசனம் காண மீண்டும் வரக்கூடும் என்பதால் வரும் நாட்களில் அத்திவரதர் தரிசனத்திற்கான பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறையாது என கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கண் திரிஷ்டி பாதிப்புகளை போக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar visit in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadar darshan in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.

- Advertisement -