ஒரு இல்லத்தில் மகாலட்சுமியின் அருளும் கடாட்சமும் இருந்தால் அந்த இல்லத்தில் எந்தவித குறையும் இருக்காது. அப்படி ஏதாவது குறைகள் ஏற்பட்டு இருப்பின் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் இல்லை என்று அர்த்தம். அப்படி லட்சுமி கடாட்சம் இல்லாத பட்சத்தில் லட்சுமி நரசிம்மரை எந்த முறையில் வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
மகாலட்சுமியின் அருள் நமக்கு இருந்தால் பணவரவிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது என்று தான் நமக்கு தெரியும். ஆனால் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைத்துவிட்டால் பணத்திற்கு மட்டுமல்ல உண்ணும் உணவு, இருக்கும் இடம், உடுத்த உடை, தைரியம், வீரம், படிப்பு, தனம், தானியம், யோகம் என்று அனைத்தையுமே நம்மால் பெற முடியும். இப்படி இவை அனைத்தையும் பெற்ற நபருக்கு தான் பரிபூரணமாக லட்சுமி கடாட்சம் இருக்கிறது என்று அர்த்தம். சரி லட்சுமி கடாட்சம் பெறுவதற்கு என்ன வழிபாடு செய்யலாம் என்று பார்ப்போம்.
இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பாக முறையில் லட்சுமி நரசிம்மரின் படம் வேண்டும். லட்சுமி நரசிம்மரை நாம் வழிபடும் பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் அனைத்தையும் நரசிம்மர் வெளியேற்றுவார். லட்சுமியின் அருளால் வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும். எந்த இல்லத்தில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறதோ அந்த இல்லத்தில் லட்சுமி குடியிருக்க மாட்டாள் என்பதால் லட்சுமி நரசிம்மரை நாம் வழிபட்டு எதிர்மறை ஆற்றல்களை நீக்கி லக்ஷ்மி கடாட்சத்தை ஏற்படுத்த முடியும்.
அதனால் கண்டிப்பாக முறையில் இந்த வழிபாட்டிற்கு லஷ்மி நரசிம்மரின் படம் வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் ஒரு மனைப்பலகையை போட்டுக் கொள்ளுங்கள். லட்சுமி நரசிம்மர் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து அந்த மனப்பலகை மேல் வைத்து விடுங்கள். அடுத்ததாக அவருக்கு நான்கு நெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். வாசனை மிகுந்த மலர்கள், தாமரைப் பூ, துளசி போன்றவற்றை வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
அவருக்கு நெய்வேத்தியமாக முந்திரி கற்கண்டு இவற்றை வைக்க வேண்டும். பிறகு அவருடைய படத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வரும் பொழுது “ஓம் லக்ஷ்மி நரசிம்மரை போற்றி” என்னும் மந்திரத்தை மனதார கூறி வலம் வர வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும். ஒன்பதாவது வாரம் ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். இப்படி லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி மகாலட்சுமியின் அருட்பார்வை நம் மீது பட்டு நம் வீட்டிற்கு லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
இதையும் படிக்கலாமே: 19-05-2024 வைகாசி வளர்பிறை ஏகாதசி வழிபாடு
மிகவும் எளிமையான இந்த லக்ஷ்மி நரசிம்மர் வழிபாட்டில் முழு நம்பிக்கை இருப்பவர்கள் மனதார வழிபாட்டை மேற்கொண்டு பலனை பெறுங்கள்.