- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval19-05-2024 வைகாசி வளர்பிறை ஏகாதசி வழிபாடு

19-05-2024 வைகாசி வளர்பிறை ஏகாதசி வழிபாடு

- Advertisement -

வைகாசி மாதம், வளர்பிறை ஏகாதசி திதி அன்றுதான், பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த ஏகாதசியை ‘மோகினி ஏகாதசி’ என்றும் சொல்லுவார்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் கணவன் மனைவி பிரச்சினைகள் தீர, பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

சந்தோஷமாக இருக்கக்கூடிய குடும்பத்தில் செல்வ வளம் மேலும் மேலும் உயர வேண்டும் என்றாலும் நாளைய தினம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளைய தினம் வீட்டில் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டிய வளர்பிறை ஏகாத்தசிதி வழிபாட்டை பற்றிய விரிவான ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மோகினி ஏகாதசி வழிபாடு

வீட்டில் இருக்கும் பெண்கள் நாளை அதிகாலை வேலையிலேயே சுத்தபத்தமாக எழுந்து குளித்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். கணவன் மனைவி பிள்ளைகள் இருந்தால் அவர்களோடு குடும்பத்துடன்சென்று தாயாரையும் பெருமாளையும் வழிபாடு செய்து வீடு திரும்பங்கள். பெருமாள் கோவிலில் கொடுத்த துளசி இலைகளை கொண்டு வந்து பீரோவிலும், நகை வைக்கும் பெட்டியிலும் வையுங்கள். உங்கள் குடும்பத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

உங்களுடைய வீட்டில் துளசி செடி இருந்தால் அந்த துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அந்த துளசி செடிக்கு மாக்கோலம் போட்டு, விளக்கு ஏற்றி கணவனும் மனைவியும் நமஸ்காரம் செய்து துளசி மாதாவின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதோடு சேர்த்து பூஜையறையில் இருக்கும் பெருமாள் மகாலட்சுமி திரு உருவப்படத்திற்கு துளசி இலைகள், வாசம் நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி உங்களால் முடிந்த நெய்வேதியம் செய்து வைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். சில பேர் மாத ஏகாதசிக்கு சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள்.

அது உங்களுடைய ஆரோக்கியத்தை பொறுத்தது. விரதம் இல்லாமல் இந்த வழிபாட்டை செய்தாலும் நிச்சயம் பலன் கிடைக்கும். நாளைய தினம் துளசி செடியில் இருந்து இலைகளை பறித்து சுவாமிக்கு போடக்கூடாது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சில பேர் வீடுகளில் துளசி செடி இருக்காது. அதை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.

- Advertisement -

அப்படி உங்களுடைய மனதில் ஒரு எண்ணம் இருந்தால், நாளைய தினம் ஒரு துளசி செடியை, வாங்கி உங்களுடைய வீட்டில் நட்டு அதற்கு புதுசாக பூஜை செய்து நாளையிலிருந்து துளசி செடியை வீட்டில் வளர்ப்பது என்பது ரொம்ப ரொம்ப விசேஷமானதாக சொல்லப்பட்டுள்ளது.

நாளைய தினம் உங்கள் குடும்ப ஒற்றுமைக்காக, குடும்பத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பூஜை அறையில் அமர்ந்து பெருமாளை நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை சொன்னால், உங்களுடைய வேண்டுதல் அப்படியே பலிக்கும். நாளை நீங்கள் சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம் இதோ உங்களுக்காக.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய

ஒரு வரி மந்திரம் தான். எல்லோரும் உச்சரிக் சுலபமான சக்தி வாய்ந்த மந்திரமும் கூட. பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை சொன்னாலும் சிறப்பு. நாளை விரதம் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரித்துக் கொண்டு பெருமாளுடைய நினைப்பிலேயே இருந்து விரதத்தை மேற்கொண்டால் நிச்சயம் உங்களுக்கு மோட்சம் கிட்டும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர பசுவிற்கு செய்ய வேண்டிய தானம்

செய்த கர்ம வினைகள் குறையும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நாளைய தினம் பெருமாளை வழிபாடு செய்பவர்கள் மேல் சொன்ன குறிப்புகளை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்