தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகள் தரக்கூடிய சுவாரஸ்யமான வழிமுறைகள் கூறுகிறது லால் கிதாப். அப்படி என்ன தான் சொல்கிறது இந்த வடமாநில பழமை ஜோதிட நூல்?

dhanusu-lal-kitab

‘லால் கிதாப்’ என்னும் மிகவும் பழமையான நூல் ஒன்று வட மாநில மக்களின் ஜோதிட நம்பிக்கைக்கு சான்றாக இருந்து வருகிறது. லால் கிதாப் என்பது இந்துக்களின் ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரம் சார்ந்த ஒரு அற்புத நூல் என்றே கூறலாம். ‘லால் கிதாப்’ என்கிற இந்த வார்த்தை உருது மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். ‘சிகப்பு புத்தகம்’ என்பது இதன் பொருளாகும். வட இந்திய மக்களால் பெரிதாக பின்பற்றி வரும் பரிகாரங்களில் ஒன்றாக ‘லால் கிதாப் பரிகாரங்கள்’ உள்ளது. ஒவ்வொரு ஜனனத்தின் போதும் நிலவும் கிரக நிலைகளின் அடிப்படையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எளிய முறையில் தீர்வு சொல்கிறது இந்த புத்தகம். இந்த நூல் பாரசீகத்தின் சாயலை கொண்டது என்கிறது ஒரு ஆய்வு. இந்திய மக்கள் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளில் அதிகம் வாழும் இந்தியர்களாலும் இந்த பரிகார முறைகள் பின்பற்றப்பட்டு பலன் காணப்படுவதாக கூறப்படுகிறது.

Lal-kitab-book

1930 ஆம் ஆண்டு ஒரு இராணுவ அதிகாரியால் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. மத கோட்பாடுகளுக்கு கட்டுபடாத இராவணனால் மக்களின் துயர் தீர்க்க எழுதப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்த அற்புத புத்தகத்தை பற்றிய சரியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் இதில் இருக்கும் பரிகார முறைகளை மேற்கொள்பவர்களுக்கு 45 நாட்களுக்குள் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக நம்பப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களாலும் பாகுபாடின்றி தங்களின் ராசிக்குரிய பரிகாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வகையில் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புத்தகம் அப்படி என்னென்ன பரிகாரங்கள் கூறியுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்:

- Advertisement -

தனுசு ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் இருக்கும் துரதிர்ஷ்டங்கள் நீங்க செம்பு நாணயங்களை ஓடும் நீரில் தொடர்ச்சியாக 43 நாட்கள் சென்று விட்டு விட கூறுகிறது.

நீங்கள் உங்களின் தந்தையார் உடைய உடைமைகளை, படுக்கை மாற்றும் ஆடைகளை பத்திரப்படுத்துவது நல்ல அதிர்ஷ்டம் உண்டாக்கும் என்று கூறுகிறது.

உங்களிடம் யார் யாசகம் கேட்டாலும் இல்லை என்று கூறிவிடாதீர்கள். உங்களால் முடிந்தவற்றை தர்மம் செய்யுங்கள் என்கிறது அந்த புத்தகம்.

nellaiyappar-temple

நீங்கள் கோவிலுக்கு நெய், தயிர், கற்பூரம் இவைகளை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் தானமாக வழங்கி வருவது சிறப்பான பலன்களை தருமாம்.

உங்கள் வீட்டின் முன்பகுதியில் பூக்கள் பூக்கும் செடிகளை விதைத்து வளர செய்வது அதிர்ஷ்டம் உண்டாக்கும். அதிலும் மஞ்சள் நிற பூக்கள் பூக்கும் செடிகளை வளர்ப்பது சிறப்பான பலன் தரும் என்கிறது லால் கிதாப்.

நீங்கள் ‘அரி வம்சம்’ என்கிற புராணத்தை வியாழக்கிழமைகளில் படிப்பது நல்லது. ‘அரி வம்சம்’ என்பது விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரை பற்றியது. மகாபாரதத்தின் இணைப்பு நூலாக கருதப்படுகிறது.

தனுசு ராசிக்காரர்கள் அரச மரத்தை வலம் வந்து வழிபாடு செய்வது நன்மைகள் உண்டாக்கும். உங்களால் முடிந்த போதெல்லாம் அரச மரத்தை பிரதட்சணம் செய்யலாம்.

தனுசு ராசிக்காரர்களாகிய நீங்கள் யாரையும் ஏமாற்றவோ, பொய் சாட்சியோ கூறக்கூடாது என்கிறது லால் கிதாப்.

ganga

உங்களது ராசிப்படி நீங்கள் உங்களது வாழ்வில் ஒரு முறையேனும் ஹரித்துவார் சென்று அங்குள்ள புண்ணிய நதியான கங்கையில் நீராடி உங்களது வம்சம் தழைத்தோங்கவும், சந்ததிகள் வாழ்வு வலம் பெறவும் வேண்டிக் கொண்டால் வேண்டியது வேண்டியபடி அப்படியே கட்டாயம் நடக்கும் என்கிறது இந்த அற்புத நூலான லால் கிதாப்.

இந்த பரிகாரங்கள் அனைத்தும் வட மாநில மக்கள் பின்பற்றி அனுபவத்தில் சிறப்பான பலன்களை கண்டுள்ளதாக கூறியுள்ளனர். இவற்றை பின்பற்றுவதால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை. நம்பிக்கையுடன் செய்து பார்க்கலாமே. நன்மைகள் நடந்தால் நல்லது தான்.

இதையும் படிக்கலாமே
சனி பகவானின் தோஷம் நீங்கிட என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 12 ராசிக்காரர்களுக்கான வழிபாடு.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Lal kitab astrology in tamil. Lal kitab remedies in tamil. Lal kitab tamil. Lal kitab tips.