அட! இது கூடவா தெரியமா இத்தனை நாள் இருந்தோமன்னு நீங்களே நினைப்பீங்க. ஆமாங்க இதுவரை இல்லத்தரசிகளுக்கு தெரியாத பல புதிய பயனுள்ள வீட்டு குறிப்புகள் இதோ உங்களுக்காக.

- Advertisement -

நாம் அன்றாடம் செய்யும் வீட்டு வேலைகளில் ஒரு சில வேலைகள் நாள் முழுவதும் செய்வது போல ஆகி விடும். அதிலும் சில வேலைகள் எப்படி செய்தாலும் கூட அது சரியாக வராது. இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இல்லத்தரசிகளுக்கு தேவையான மிகவும் பயனுள்ள பல குறிப்புகள் உள்ளது. அது என்னவென்று தான் இப்பொழுது நாம் இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பீரோவில் துணிகளை மடித்து வைத்திருக்கும் போது சில நேரங்களில் அதிலிருந்து ஒரு வித வாடை வீசும். அப்படி வராமல் இருக்க ஒரு பேப்பரில் கொஞ்சமா அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் ஜவ்வாதை சேர்த்து நன்றாக மடித்து துணிகளில் இடையில் வைத்து விட்டால், துணிகள் நல்ல நறுமணமாக இருக்கும். ஒரு வருடம் கழித்து எடுத்தால் கூட துணி நறுமணத்துடன் இருக்கும்.

- Advertisement -

தேங்காய் எப்போதுமே பிரஷ்ஷாக இருந்தால் தான் சமைக்கும் போது அதன் சுவை நன்றாக இருக்கும். ஆனால் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பின் சமைத்தால் அதன் சுவையே மாறி விடும். இனி தேங்காயை பிரிட்ஜில் வைக்கும் போது அதன் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவி வைத்து விடுங்கள். தேங்காய் வாடாமல் இருப்பதுடன் அதன் சுவையும் மாறாமல் இருக்கும். அது மட்டும் இன்றி தேங்காய் பிரிட்ஜில் ஸ்டோர் செய்யும் போது அதை துருவி ஒரு பாக்ஸில் போட்டு வைத்து விட்டால் ஒரு மாதம் வரை கூட தேங்காய் கெடாமல் இருக்கும்.

வீட்டில் எலுமிச்சை பழங்களை பயன்படுத்திய பிறகு அதன் தோல்களை தூக்கி தூர போட்டு விடுவோம். அது போல செய்யாமல் இந்த எலுமிச்சை பழம் துண்டுகளை சின்னதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து சாரை மட்டும் வடித்து எடுத்து விடுங்கள். இதில் கொஞ்சம் செங்கல் தூளை கலந்து பத்து நிமிடம் அப்படியே வைத்து விட்டால் இது பேஸ்ட் பதத்திற்கு மாறி விடும். இதை வைத்து வீட்டில் அடிபிடித்த பாத்திரங்களை எல்லாம் தேய்த்தால் கறை பிடித்த சுவடே தெரியாத அளவிற்கு பாத்திரங்கள் பளிச் சென்று மாறி விடும்.

- Advertisement -

ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக ஷாம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் பேக்கிங் சோடா சேர்த்து இவை இரண்டையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். சமையலறை, மேடை, ஸ்டவ் போன்றவற்றை இந்த தண்ணீரை வைத்து துடைக்கும் போது எண்ணெய் பிசுக்கு கறைகள் எல்லாம் எளிதில் போவதுடன், கரப்பான் பூச்சி தொல்லையும் இருக்காது.

நம் அனைவர் வீட்டிலும் மருந்து பாட்டில்கள் நிச்சயமாக இருக்கும். அதன் மேலே அளந்து ஊற்றுவதற்காக சிறிய பிளாஸ்டிக் மூடிகள் இருக்கும். அதை நாம் வீணாக தூக்கி கீழே போட்டு விடுவோம். அப்படி போடாமல் அந்த மூடிகளை ஸ்டவ்வின் அடியில் இருக்கும் ஸ்டாண்டுக்கு கீழே வைத்து விட்டால் சமைக்கும் போது ஸ்டவ் நகர்ந்து போகாமல் இருக்கும்.

- Advertisement -

கத்திரிக்காயை எப்படி சுத்தம் செய்து நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்தாலுமே கருத்து போய் விடும். இனி கத்தரிக்காயை நறுக்கி தண்ணீரில் போடும் போது சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து போட்டு கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் கத்திரிக்காய் கறுக்காமல் இருக்கும். அது போல் பொரியல் செய்யும் பொழுது சில நேரங்களில் உப்பு கூடி விடும். அது போன்ற சமயங்களில் தேங்காயை கொஞ்சம் அதிகமாக அதில் கலந்து விட்டால் போதும் பொரியலின் சுவையும் பிரமாதமாக இருப்பதுடன் உப்பும் கரிக்காது.

இதையும் படிக்கலாமே: பாத்திரம் தேய்க்கும் லிக்விடில் இந்த 1 பொருளை கலந்து விட்டால் போதும். அதை வைத்தே பாத்ரூம், டாய்லெட் வரை சுத்தம் செய்யலாம்.

இந்த சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் உங்களின் வேலைகள் மிகவும் எளிதாக மாறி விடும். இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று தோன்றினால் நீங்களும் கட்டாயமாக முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -