மீதமான இட்லியை இப்படி செய்தால் உனக்கா எனக்கா என சண்டை வந்துவிடும். எவ்வளவு செய்தாலும் வீட்டில் இருப்பவர்களுக்கு பத்தவே பத்தாது.

chilli-idli2
- Advertisement -

பொதுவாகவே இட்லி என்பது கொஞ்சமாகத்தான் மீதமாகும் அல்லவா. நான்கு அல்லது ஐந்து இட்லி மீதமாகும். அந்த இட்லியை இட்லி உப்புமா செய்தால் நீ சாப்பிடுவதா, நான் சாப்பிடுவதா என்ற பிரச்சினை இருக்கும். அதுவே மீதமான இட்லியில் இப்படி சமைத்து கொடுத்து பாருங்கள்.  சூப்பரான மசாலா பொருட்கள் நிறைந்த காரசாரமான ஒரு ரெசிபி இது. இப்படி மீதமான இட்லியை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் மிச்சம் வைக்காமல் நீயா நானா என சண்டை போட்டு கொண்டு சாப்பிடுவார்கள் என்றால் பாருங்களேன். நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம்.

முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். மீதமான இட்லியை போட்டு பொரித்து எடுக்கும் அளவிற்கு எண்ணெய் தேவை. இட்லியை வெட்ட வேண்டாம். முழு முழு இட்லி ஆகவே எண்ணெயில் போட்டு அதை கோல்டன் ப்ரவுன் கலர் வரும் அளவிற்கு பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த இட்லியை க்யூப் வடிவத்தில் கத்தியால் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். என்னை மிதமான தீயில் இருக்கும்போது இட்லியை போட்டு பொறிக்க வேண்டும். (மீதமான 4 இட்லிக்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியானதாக இருக்கும்).

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, தோலுரித்து பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 5, பச்சைமிளகாய் – 1, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 இந்த பொருட்களை போட்டு வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமான உடன் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் இரண்டு சேர்த்து உப்பு – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து போட்டு நன்றாக வதக்கி விட்டு அதன் பின்பு அடுப்பை சிம்மில் வைத்து ஒரு மூடி போட்டு 2 நிமிடம் தக்காளி பழத்தை நன்றாக வேகவைக்க வேண்டும்.

இரண்டு நிமிடம் கழித்து தக்காளி பழங்களை எல்லாம் நன்றாக நசுக்கி விட்டு மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், டொமட்டோ சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து விட்டு 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி இந்த மசாலா பொருட்களை நன்றாக கலந்து பொரித்து வெட்டி வைத்திருக்கும் இட்லியை கடாயில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இட்லி உடையாமல் கலந்து விடுங்கள். இறுதியாக இதன் மேலே 1 ஸ்பூன் இட்லி பொடியை தூவி மீண்டும் ஒருமுறை கலந்து விட்டு இட்லி நன்றாக சூடாகி மசாலா பொருட்களுடன் சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான்.

சுடச்சுட இதை ஒரு தட்டில் போட்டு மேலே பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயம் தூவி ஒரு ஸ்பூனை வைத்து வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்து பாருங்கள். எப்படி சாப்பிடுகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். மிஸ் பண்ணாதீங்க இந்த இன்ட்ரஸ்டிங்கான ரெசிபியை கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -