10 நிமிடத்தில் மீதமான சாதத்தில் சுவையான சூப்பரான அடை சுடுவது எப்படி? சுட சுட இந்த அடையை சுட்டி எடுக்கும் போதே காலியாகிவிடும்.

adai1
- Advertisement -

பழைய சாதத்தை அப்படியே குழம்பு ரசம் ஊற்றி சாப்பிட வேண்டும் என்றால் நிச்சயமாக யாருக்குமே தொண்டையில் இறங்காது. காலையில் வைத்த சாதகமாக இருந்தாலும், இரவு மிஞ்சி இருந்தால், அந்த சாதத்தை வைத்து சூப்பராக சுலபமாக 10 நிமிடத்தில் ஒரு அடையை சுட்டு எடுப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட ஆளுக்கு 2 அடை சாப்பிட்டால் போதும். இரவு வயிறு நிரம்பிவிடும். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, மதியம் வைத்த குழம்பு மீதமிருந்தால் கூட சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். சரி நேரத்தைக் கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம் வாருங்கள்.

முதலில் 2 கப் அளவு சாதத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்றி அரைக்கக்கூடாது. சாதம் ஒன்றும் இரண்டுமாக அரை பட்டால் போதும். இந்த சாதத்தை ஒரு அகலமான பவுலுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த சாதத்தோடு கடலைமாவு – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை – சிறிதளவு, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு இந்த பொருட்களை எல்லாம் போட்டு உங்கள் கையைக் கொண்டு நன்றாக பிசைய வேண்டும்.

கையில் சாதம் ஒட்டி பிடிக்கத்தான் செய்யும். தேவைப்பட்டால் கையில் கொஞ்சம் எண்ணெயை தொட்டுக்கூட மாவை ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ளுங்கள். இப்போது இந்த மாவை உங்களுக்கு தேவையான அளவு சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். அதன் பின்பு வாழை இலையிலோ அல்லது ஒரு கவரிலோ கொஞ்சமாக எண்ணெய் தடவி தயார் செய்து வைத்திருக்கும் உருண்டையை வைத்து, கையில் கொஞ்சம் தண்ணீர் தொட்டு அடை போல தட்டிக் கொள்ளுங்கள். கொஞ்சம் தடிமனாக தட்டி கொண்டால் கூட போதும்.

- Advertisement -

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தட்டிய அடையை தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான மீதமான சாதத்தில் அடை தயார். இதை எதில் செய்தீர்கள் என்று நீங்கள் சொல்லும் வரை வீட்டில் இருப்பவர்கள் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு இதனோட சுவை சூப்பராக இருக்கும். குறிப்பாக மிருதுவாக இருக்கும். சாப்பிடுவதற்கு எந்த கஷ்டமும் இருக்காது. சுட்ட உடனேயே சுடச்சுட சாப்பிட்டு விடுங்கள்.

உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சி இருந்தா உங்க வீட்டில இன்னைக்கு ராத்திரி மீதமான சாதத்தில் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. இந்த அடையை கொஞ்சம் நிறைய எண்ணெய் விட்டு சிவக்க வைத்து எடுங்கள் அப்போதுதான் சாப்பிட நல்ல ருசி கிடைக்கும்.

- Advertisement -