மீதமான சாதத்தை இப்படியும் கூட தாளிக்கலாமா? இத்தனை நாட்களாக இந்த ரெசிப்பி தெரியாமல் போச்சே.

poondu-sadam1
- Advertisement -

மீதமான சாதத்தை வைத்து நாம் எத்தனையோ ரெசிபிகளை பார்த்திருப்போம். ஆனால் மிக மிக சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அருமையான ஒரு பூண்டு சாதத்தை எப்படி தாளிப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிகக் குறைந்த நேரத்தில் மிக மிகக் குறைந்த பொருட்களை வைத்து உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பூண்டு சாதம் ரெசிபி உங்களுக்காக.

poondu-sadam2

இரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு சாதம் இருந்தால், பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியானதாக இருக்கும். 8 லிருந்து 10 பல் பூண்டை தோலுரித்து ஒரு சிறிய உரலில் போட்டுக் கொள்ளுங்கள். இதோடு 1/2 – ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 – ஸ்பூன் உப்பு, சேர்த்து பூண்டை நன்றாக நசுக்கி விட வேண்டும். இப்போது நமக்கு பூண்டு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்த விழுது கிடைத்திருக்கும்.

- Advertisement -

வடித்த மீதான சாதத்தை ஒரு அகலமான தட்டில் கொட்டி, இந்த சாதத்தோடு இடித்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு நன்றாக பிசைந்து விடுங்கள். சாதத்தை குழைத்து விடக்கூடாது. உதிரி உதிரியாக சாதம் இருக்கும் படி விரல்களால் பிசைய வேண்டும். மசாலாப் பொருட்கள் சேர்த்த இந்த கலவை சாதம் அப்படியே இருக்கட்டும். அடுத்து இந்த சாதத்தை தாளிக்க வேண்டும். (ஒருவேளை உங்களுக்கு சாதத்தோடு மசாலா பொருட்களை சேர்த்து பிசையும்போது சாதம் பிசுபிசுப்புத் தன்மையோடு இருந்தால், இதனுடன் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கூட பிசைந்து கொள்ளலாம்.)

poondu

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன், வேர்க்கடலை – 2 ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 4 சேர்த்து நன்றாக வறுத்து விடவேண்டும். அதன் பின்பு கருவேப்பிலை – 1 கொத்து, 2 – சிட்டிகை பெருங்காயம், போட்டு தாளித்து ஏற்கனவே மசாலா பொருட்களை சேர்த்து பிசைந்து வைத்து இருக்கின்றோம் அல்லவா அந்த சாதத்தை கடாயில் இருக்கும் தாளிப்மில் சேர்த்து, தேவைப்பட்டால் கொஞ்சம் உப்புத் தூளைத் தூவி சாதத்தை நன்றாக சூடு செய்து சுடச்சுட பரிமாறுங்கள்.

- Advertisement -

அட்டகாசமான சுவையில் ஒரு வெரைட்டி ரைஸ் தயார். பழைய சாதத்தில் இந்த பூண்டு சாதம் செய்தால் அப்படியே வீட்டில் உடனடியாக சாப்பிட்டு விட வேண்டும். அதுவே புதிய சாதத்தை வடித்து ஆற வைத்து அதில் இந்த பூண்டு சாதத்தை செய்தால் லஞ்ச் பாக்ஸில் கூட கொடுத்து அனுப்பலாம்.

poondu-sadam

அவரவர் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்தது போல பூண்டை கூட, குறைய சேர்த்துக்கொள்ளலாம். காரத்தையும் கூட குறைய சேர்த்துக் கொள்ளுங்கள். அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா, உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -