இந்த ரகசியம் மட்டும் தெரிந்தால், புளித்த இட்லி மாவை இனி வீணாக கீழே கொட்டவே மாட்டீங்க.

dosa
- Advertisement -

நம்முடைய வீட்டில் கடைசியாக மிஞ்சும் புளித்த மாவை பெரும்பாலும் பணியாரம் தான் செய்வோம். சிலபேர் அந்த மாவை வீணாக கீழே கொட்டி விடுவார்கள். சாப்பிடும் பொருளை வீணாக்க வேண்டாம். புளித்த இட்லி அல்லது தோசை மாவில் எப்படி புதுவிதமான ஒரு ரெசிபியை தயார் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். புளித்த மாவை இப்படி மாற்றி விட்டால், அந்த மாவில் இருக்கும் புளிப்பு வாடை, புளிப்பு சுவை எதுவுமே நமக்கு தெரியாது. புளித்த இட்லி மாவை எப்படி நல்ல மாவாக மாற்றுவது தெரிந்துகொள்வோமா.

dosa1

முதலில் உங்களுடைய வீட்டில் எந்த அளவிற்கு புளித்த மாவு உள்ளது என்பதை ஒரு கப்பில் அளந்து வைத்துக்கொள்ளுங்கள். 1 கப் அளவு புளித்த மாவு இருந்தால் அதை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

எந்த அளவுக்கு புளித்த மாவு இருந்ததோ அதே அளவுக்கு 1 கப் அளவு ரவையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு ரவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, நன்றாக 15 நிமிடங்கள் ஊற வைத்துவிடுங்கள்.

dosa2

தண்ணீரில் ஊறிய இந்த ரவையை மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். அதே மிக்ஸியில் 1/4 கப் பச்சரிசி மாவையும் சேர்த்து, நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்த விழுதை இட்லி மாவில் ஊற்றி விடுங்கள். (ஊறவைத்த ரவையையும் அரசியையும் மிக்ஸி ஜாரில் போட்டு, தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவேண்டும். ஊறவைத்த ரவையிலேயே தண்ணீர் இருந்தால், தண்ணீர் கூட ஊற்ற வேண்டாம்.)

- Advertisement -

பழைய இட்லி மாவு, அரைத்த ரவை, அரிசி மாவு இந்த மூன்றையும் தோசை மாவு பக்குவத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் நாம் சேர்த்திருக்கும் ரவைக்கும் அரிசி மாவுக்கு மட்டும் தேவையான அளவு உப்பை போட்டு கலந்துவிட வேண்டும். இப்போது நமக்கு தோசை செய்வதற்கு மாவு தயாராக உள்ளது.

dosa4

இந்த மாவோடு கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை, சீரகம், நுணுகிய மிளகு இந்த பொருட்களை எல்லாம் உங்களுடைய தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த மாவில் புளித்த மாவு இருக்குது அப்படின்னு யாராலயும் நிச்சயம் கண்டுபிடிக்கவே முடியாது.

dosa3

தோசை உற்ற மாவு தயார். அடுப்பில் தோசை கல்லை வைத்துக்கொள்ளுங்கள். தோசை கல் நன்றாக சூடானதும் அதன்மேலே எண்ணெயை தடவி விட்டு இந்த தோசை மாவை எடுத்து லேசாக பரவலாக ஊற்றி, அப்படியே தேய்த்து எண்ணெய் ஊற்றி, ஒரு பக்கம் சிவந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி, வேக வைத்து எடுத்தால் சூப்பரான சுவையான ஆரோக்கியமான தோசை தயார்.

dosa5

இந்த தோசையை ரொம்பவும் மெல்லிசாக வார்க்க முடியாது. தேவைப்பட்டால் ஊத்தப்பம் போல கூட இந்த தோசையை ஊற்றி ஒரு மூடி போட்டு வேக வைத்து சாப்பிடலாம். ருசியாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, சாம்பார் எதை வேண்டுமென்றாலும் சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா. இனி மிச்சமான கொஞ்சம் இட்லி மாவை கூட வீணாக்காதீர்கள்.

- Advertisement -