மீதமான சாதத்தில் மொறு மொறு தோசையா? இது தெரிஞ்சா இனி தோசை மாவு காலியானலும் வருத்தப்படவே வேண்டாமே!

boiled-rice-dosa-tamil
- Advertisement -

ருசியான மொறு மொறு தோசை தயாரிக்க தோசை மாவு இல்லையே என்று இனி கவலைப்பட வேண்டாம். சட்டுன்னு மீதமான சாதம் இருந்தால் இப்படி ஒரு முறை தோசை செஞ்சு பாருங்க அசந்து போவீங்க! சாப்பாடு மீதமானால் இனி தூக்கி போட வேண்டாம். இதே மாதிரி நீங்களும் தோசை செஞ்சு சாப்பிடலாம். மொறுமொறுன்னு ரொம்ப சுலபமாக பத்தே நிமிடத்தில் தயாரிக்க கூடிய இந்த தோசை எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து காண இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

தேவையான பொருட்கள்

மீதமான சாதம் – ஒரு கப், ரவை – ஒரு கப், புளித்த தயிர் – அரை கப், தண்ணீர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

மொறுமொறுவென்று மீதமான சாதத்தில் தோசை செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு வடித்த சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் உப்புமா செய்ய பயன்படுத்தும் ரவை ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். ரவை வறுத்து அல்லது வறுக்காமல் கூட நீங்கள் சேர்க்கலாம் பிரச்சனை இல்லை.

கொஞ்சம் புளித்த தயிர் அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் கெட்டியாக இருக்க வேண்டும். சாதாரண தயிரைக் காட்டிலும் புளித்த தயிர் சேர்க்கும் பொழுது தோசையின் ருசி நன்றாக இருக்கும். எந்த கப்பில் சாதம் எடுக்கிறீர்களோ அதே கப் அளவிற்கு மற்ற பொருட்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு இப்பொழுது தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். இதற்கு மேல் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.

- Advertisement -

நீங்கள் எடுக்கும் சாதத்தின் அளவை பொறுத்து மற்ற பொருட்களின் அளவையும் கூட அல்லது குறைத்து சேருங்கள். இப்பொழுது நன்கு கலந்து மூடி போட்டு ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். தண்ணீர் முழுவதும் உரிஞ்சு கொள்ளப்பட்டிருக்கும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரெண்டு பிரிவுகளாக இந்த ஊற வைத்த பொருட்களை சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெங்காயம் தக்காளி எதையுமே சேர்க்காம முட்டை மசாலாவை ஒரு முறை வித்தியாசமா இப்படி செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

எல்லா மாவையும் ஒரு பவுலில் சேர்த்து அதற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை காய வைத்து அதில் ஒரு தோசை கல்லை வையுங்கள். கல் காய்ந்ததும் இரண்டு கரண்டி மாவை எடுத்து மெல்லியதாக பரப்பிக் கொள்ளுங்கள். இப்பொழுது சுற்றிலும் எண்ணெய் விட்டு முப்பது வினாடிகள் அப்படியே விட்டால் மொறுமொறுன்னு கிரிஸ்பியாக நன்கு வெந்து வரும். அதன் பிறகு நீங்கள் திருப்பி போட்டு பத்து செகண்ட் விட்டு எடுத்தால் சூப்பரான டேஸ்டியான மொறு மொறு தோசை தயார்! இதே போல நீங்களும் தோசை சுட்டுக் கொடுத்து பாருங்க இனி தோசை மாவு கூட உங்களுக்கு வேண்டாம் சாதம் இருந்தாலே போதும் என்று தோணும்.

- Advertisement -