ரொம்ப சிம்பிளா அட்டகாசமான சுவையில லெமன் ரசத்தை இப்படி செய்து பாருங்க . சுட சுட சாதத்துக்கு இந்த ரசம் இருந்தா போதும் சைடிஷ் இல்லாமலே தட்டு சோறு உள்ள போகும்.

- Advertisement -

முன்பெல்லாம் சமையல் எதுவாக இருந்தாலும் ரசம், தயிர் இவை இரண்டும் கட்டாயமாக இருக்கும். இப்போதும் சில வீடுகளில் அப்படி இருக்கத் தான் செய்கிறது. ரசமாக எதுவாக இருந்தாலும் அதை சாப்பிட்ட உடன் ஜீரண சக்தி அதிகரித்து உடலுக்கு தெம்பை கொடுக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவிலும் அருமையான லெமன் ரசம் எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க அந்த ரசம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை பழம் – 2, தக்காளி -2, துவரம் பருப்பு வேக வைத்த மசித்த தண்ணீர் – 1/2 கப், மிளகு -1 டீஸ்பூன், சீரகம் -2 டீஸ்பூன், பூண்டு -10, பச்சை மிளகாய் – 4, பெருங்காயம் -1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு -1/2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் -2, நல்லெண்ணெய் -2 ஸ்பூன், கடுகு -1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, கொத்தமல்லி – கைப்பிடி அளவு.

- Advertisement -

செய்முறை

இந்த ரசம் செய்வதற்கு முன்பாக எலுமிச்சை பழத்தை அரிந்து நன்றாக சாறு எடுத்து விதை இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். நல்ல பழுத்த தக்காளியாக எடுத்து அதை பொடியாக நறுக்கி வைத்து விடுங்கள். அதே போல் துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீரையும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் ரசத்திற்கு ரசப் பொடி அரைத்து கொள்ளலாம். அதற்கு மிளகு ஒரு டீஸ்பூன், சீரகம் இரண்டையும் அம்மி அல்லது இடி உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து 10 பல் உரித்த பூண்டையும் நசுக்கி அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு பச்சை மிளகாயையும் இதே போல் இடித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த ரசத்தை பொருத்த வரை அம்மியிலோ அல்லது இடி உரலிலோ இடித்து செய்யும் பொழுது தான், இதன் சுவை அருமையாக இருக்கும். மிக்ஸியில் சேர்த்து அரைக்கும் போது ரசம் அந்த அளவிற்கு சுவையாக இருக்காது.

இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்த பிறகு நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு சீரகம் இரண்டும் சேர்த்து பொரித்த பிறகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இடித்து வைத்த பூண்டு, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கிய பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக மசித்து வேக வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு பருப்பு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், எல்லாம் சேர்த்து கொத்தமல்லி தழையும் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: நாண் சாப்பிட இனி ஹோட்டலுக்கு போக வேண்டிய அவசியமே இல்லைங்க. ரொம்ப சிம்பிளா பர்பெக்ட்டான ஹோட்டல் ஸ்டைல் நாண் வீட்டிலேயே செய்திடலாம்

ரசம் நன்றாக கொதித்த பிறகு கடைசியாக அரைத்து வைத்த மிளகு சீராக பொடியை சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் பிறகு கடைசியாக எலுமிச்சை சாறையும் சேர்த்து மீதம் இருக்கும் கொத்துமல்லி இலை களையும் மேலே தூவி மூடி விடுங்கள். அருமையான லெமன் ரசம் தயார்.

- Advertisement -