- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகுளிர்காலத்தில் உங்கள் உதடு மென்மையை இழந்து சுரசுரப்பாக மாறுகிறதா? இதை செய்து பாருங்கள் உங்கள் உதடு...

குளிர்காலத்தில் உங்கள் உதடு மென்மையை இழந்து சுரசுரப்பாக மாறுகிறதா? இதை செய்து பாருங்கள் உங்கள் உதடு சிகப்பாகவும் மென்மையாகவும் மாறிவிடும்.

- Advertisement -

தற்காலத்தில் ஆண்கள் பெண்கள் என இரு பாலினரும் தங்கள் முகத்தை அழகாக காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள் என்று சொன்னாலும் பெண்களுக்கு இந்த உணர்வானது சற்று கூடுதலாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை. அந்த வகையில் பெண்கள் தங்கள் உதடுகளை சாப்டாகவும் சிவப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எப்போதும் எண்ணுவதுண்டு.

அதிலும் குளிக்காலத்தில் உதட்டின் மென்மையானது அதிக அளவில் கேள்விக்குறியாகும். இதற்காக மார்க்கெட்டில் எத்தனையோ பொருட்கள் உள்ளன. ஆனால் அவர்களை பயன்படுத்துவதன் மூலம் உதட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் அது போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு இயற்கையான முறையால் எப்படி உதட்டுக்கு தேவையான லிப்பாம் தயாரிப்பது என்று இந்த அழகு குறிப்பு பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

லிப் பாம் செய்வது எப்படி:
முதலில் ஒரு சிறிய பௌலில் இரண்டு அல்லது மூன்று சொட்டு ரோஸ் வாட்டர் எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் பச்சை பால் எடுத்துக்கொண்டு அதை நன்றாக கலக்கவும். உங்களுக்கு இந்த கலவை குளிச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் குளிசாதண பெட்டியில் வைக்கலாம், இல்லை என்றால் வேண்டாம்.

லிப் பாம் பயன்படுத்தும் முறை.
நாம் மேலே தயாரித்த லிப் பாமை இரவு தூங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு உங்கள் உதட்டில் அப்ளை செய்துவிட்டு அதை 15 நிமிடங்கள் அப்படியே விட்டு கழுவிவிட வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இப்படி செய்யலாம். இதன் மூலம் உதடு மென்மையாகவும் சிகப்பாகவும் இருக்கும்.

- Advertisement -

நாம் பயன்படுத்திய பொருட்களின் பயன்கள்
பச்சை பாலில் வைட்டமின்-A சத்து இருப்பதால் அது நம் உதட்டை மென்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ரோஸ் வாட்டர் உதடுகளின் கருமை தன்மையை நீக்கி உதடு சிகப்பாக உதவுகிறது. தேன், ஈரப்பதமாக வைத்துக்கொள்ளவும், உதட்டில் உள்ள சுரசுரப்பு தோலை நீக்கவும் உதவுகிறது.

இதையும் படிங்க: வெறும் கைப்பிடி ரோஜா இதழ் இருந்தா போதும் முகத்தை பளிச்சென்று பள பளப்பாக மாற்ற இப்படி ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு:
இதை தொடர்ச்சியாக பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் உதட்டிற்கு இது ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை டெஸ்ட் செய்து பாருங்கள். ஒருவேளை உங்கள் உதடு இதை ஏற்கவில்லை என்றால் பயன்படுத்த வேண்டும். அதே போன்று மருத்துவரின் ஆலோசனை பெறுவதும் நல்லது.

சற்று முன்