ஒரே மாதத்தில் முடி கருகருன்னு காடு போல அடர்த்தய வளர பெஸ்ட் பேக். நீங்களும் டிரை பண்ணி பாருங்க.

long hair tips
- Advertisement -

முடி நல்லா கருகருன்னு நீளமா வளர்க்கணும்னு ஆசைப்படாதவங்க யாருமே இருக்க முடியாது. ஆனால் இன்றைய சூழ்நிலை அதற்கான வாய்ப்பை தருவதில்லை. எப்படி பராமரித்தாலும் முடி உதிர்தல், பொடுகு, முடி வெடிப்பு, இளநரை போன்ற பிரச்சனைகள் வருவது இயல்பாகி விட்டது. அதையெல்லாம் சரி செய்யக் கூடிய அற்புதமான ரெமிடியை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்து முடி வளர
இதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் இரண்டையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் கரிசலாங்கண்ணி பொடி ஒரு ஸ்பூன், வேப்பிலை ஒரு ஸ்பூன், செம்பருத்தி பொடி ஒரு ஸ்பூன், முருங்கை பொடி ஒரு ஸ்பூன், மருதாணி பொடி ஒரு ஸ்பூன் இவை அனைத்தையும் ஏற்கனவே அரைத்து வைத்த கருஞ்சீரக வெந்திய பொடியுடன் சேர்த்து பாட்டில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இந்தக் பொடிகள் இலையாக கிடைக்குமானால் அதை நிழலில் உலர்த்தி அரைத்துக் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

நீங்கள் தலைக்கு குளிக்கும் போது கலந்து வைத்த இந்த பொடியை உங்கள் முடியின் அளவிற்கு ஏற்றார் போல் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சாதம் வடித்த கஞ்சி, ஒரு முட்டை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல குழைத்து தலையில் பேக் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விடுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் போதும். முடி உதிர்வு பிரச்சனை நிரந்தரமாக தீர்வதுடன் இளநரை, பொடுகு, செம்பட்டை, முடி உதிர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் இது சரி செய்து விடும்.

இதையும் படிக்கலாமே: உடனடியான பிரகாசத்தை தரக்கூடிய கேழ்வரகு மாவு ஃபேஸ் பேக்

இதே பொடியுடன் வேம்பாலபட்டை, ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்த பிறகு இரவில் உறங்கும் முன் தலைக்கு தேய்த்து விட்டு காலையில் குளித்து விடுங்கள். இதுவும் முடி வளர்ச்சிக்கு அதிக பலனை கொடுக்கும். இயற்கையான முறையில் முடி வளர பயன்படுத்தவும் இந்த பேக் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -