அதிர்ஷ்டம் பெற 12 ராசிக்காரர்களும் அணிய வேண்டிய ‘சாமி டாலர்’ என்ன தெரியுமா?

astro-pendant-soolam

12 ராசிக்காரர்களும் உங்களுடைய ராசிகளுக்கு ஏற்ப சில குறியீடுகளை உடம்பில் அணிந்து கொள்வதன் மூலம் அதிர்ஷ்டம் பெறலாம் என்கிறது ஜோதிடம். அந்த வகையில் நாம் அணிந்து கொள்ளும் சுவாமி டாலர் நம்முடைய ராசிக்கு எவை அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்? எந்த சுவாமியின் படத்தை நாம் டாலராக கழுத்தில் அணிந்து கொண்டால் நமக்கு யோகம் வரும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

fish-key-chain

பொதுவாக நம் ராசியின் குறியீட்டை தொடர்ந்து பார்த்து வருவதும், அதை நம் உடம்பில் படும்படி அணிந்து கொள்வதும் யோகத்தை தரும். உதாரணத்திற்கு மீன ராசிக்காரர்கள் மீன் படங்களை அடிக்கடி பார்ப்பது, மீன் தொட்டியில் மீன்களை வளர்ப்பது, மீன் சின்னம் பொறித்த பொருட்களை பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பது ஐதீகம். இது போல ஒவ்வொரு ராசிக்காரர்களும் தத்தம் சின்னத்தை பயன்படுத்துவது உத்தமம்.

அதே போல நம்முடைய நட்சத்திரத்திற்கு ஏற்ப விருட்சங்களும், நட்சத்திர சின்னம் பொறித்த பொருட்களையும் பயன்படுத்துவது யோகம் தரும். உங்களுடைய நட்சத்திரத்திற்கு உரிய விருட்சத்தை வளர்த்து வருவதும், அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். பொதுவாக ஓம், வேல், திரிசூலம் ஆகிய சின்னங்களைக் கழுத்தில் டாலராக அணிந்து கொள்பவர்களுக்கு அதிகம் மன வலிமை இருக்கும்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் மகாவிஷ்ணு மற்றும் முருகன் டாலரை அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை தரும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் மகா லட்சுமியின் திருவுருவம் பதித்த பொருட்களையும், அதனை வெள்ளி அல்லது தங்கம் போன்ற உலோகம் கொண்ட டாலராக கழுத்தில் அணிந்து கொள்வதும் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

- Advertisement -

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி டாலரை அணிந்து கொள்வது விசேஷமான பலன்களைத் தரும். மேலும் ஹயக்ரீவர், முருகன், மகாவிஷ்ணு ஆகியோரின் உருவம் பதித்த டாலரை பயன்படுத்துவதும் மன வலிமையை அதிகரிக்க செய்யும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் திருப்பதி வெங்கடாசலபதி, ஸ்ரீ கிருஷ்ணர், மகாலட்சுமி, குருவாயூரப்பன் ஆகிய சுவாமிகளின் படங்களை டாலரை அணிந்து கொள்வது யோகத்தைக் கொடுக்கும். அடிக்கடி திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமான், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி ஆகிய திருவுருவங்களை பதித்த டாலரை கழுத்தில் அணிந்து கொள்வது மேலும் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். சிம்ம ராசியில் பிறந்த சிறுவர்களாக இருந்தால் சரஸ்வதி திருவுருவம் பதித்த டாலர் அணிந்து கொள்வது அறிவுத் திறமையை வளர்க்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்கள் அம்பாளுடைய திருஉருவம், உங்கள் வீட்டு குலதெய்வ திரு உருவங்கள் பதித்த டாலர் அணிந்து கொள்வது சிறப்பான பலன்களைக் கொடுக்க வல்லது. மேலும் நீங்கள் ராகவேந்திரர் போன்ற குருமார்களின் வழியை பின்பற்றுபவர்களாக இருந்தால் அவர்களின் உருவம் பதித்த டாலரையும் அணிந்து கொள்ளலாம்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்கள் வேல், சூலம் போன்ற சின்னங்களையும் மகாலட்சுமி மற்றும் சிவபெருமான் உருவம் பதித்த டாலர்களையும் அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை தரும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் முருகன், நரசிம்ம பெருமாள் அல்லது திருப்பதி வெங்கடாஜலபதி, வேல், சூலம் ஆகிய சின்னங்களை டாலராக அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை தரும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்கள் மற்ற எல்லா சுவாமிகளை விடவும் மகாலட்சுமியின் திருவுருவம் பதித்த டாலர் அணிந்து கொள்வது சிறப்பான யோகத்தை கொடுக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் உங்களுடைய குல தெய்வத்தின் திரு உருவத்தை டாலராக அணிந்து கொள்ளலாம். அல்லது முருகன், விஷ்ணு, நரசிம்மர், செல்வாதிபதி குபேரர் உடைய டாலரை அணிந்து கொள்வதும் யோகத்தை கொடுக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்கள் விருட்சங்கள் அதாவது மரங்கள் பதித்த சின்னங்களை டாலராக அணிந்து கொள்வது, இலைகள் போன்ற சின்னங்களை அணிந்து கொள்வது, உங்கள் ராசியின் சின்னமாக இருக்கும் பூரண கும்பத்தை டாலராக கழுத்தில் அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை தரும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்கள் ‘ஓம்’ என்கிற ப்ரணவ மந்திரத்தை டாலராக அணிந்து கொள்வது மேலும் அதிர்ஷ்டத்தை பெருக்கும். விஷ்ணு, ஸ்வஸ்திக் சின்னம், வேல், திரிசூலம் ஆகிய சின்னங்களைப் பதித்த டாலரை அணிந்து கொள்வதும் அதிர்ஷ்டம் தான்.