நிலை வாசலில் கட்டும் மாஇலைகளை இனி தூக்கி குப்பையில் போடாதீங்க. உங்க வீட்டு ஐஸ்வர்யம் அந்த மாஇலையோடு வெளியே போக வாய்ப்பு உள்ளது.

maalai
- Advertisement -

லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக் கூடிய சக்தி இந்த மா மரத்திற்கு உண்டு, மா இலைகளுக்கும் உண்டு. இதனால்தான் சுபகாரியங்களில் கலசம் நிறுத்தும் போது, தண்ணீரில் மா இலைகளை போடுவார்கள். அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க மா இலைகள் பயன்படுத்தப்படுகின்றது. சுப காரியங்கள் என்றால் அந்த வீட்டு நிலை வாசலில் தோரணத்தில் மாயிலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இந்த மா இலைகளுக்கு எதற்காக இத்தனை மகத்துவம் என்றால், இந்த மா இலைகளுக்கு அருகில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும், பேய் பிசாசு கெட்ட சக்தியும் நெருங்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆகவே கண்ணுக்குத் தெரியாத எந்த ஒரு எதிர்மறை ஆற்றலின் மூலமாகவும் நம் தொடங்கக் கூடிய நல்ல காரியத்திற்கு தடைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நல்ல விஷயங்களில் இந்த மா இலைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யத்தை பெருக்கிக் கொள்ள மாஇலைகளை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றி சில விஷயங்களை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த மா இலைகளை கொண்டு வந்து நிலை வாசலில் மட்டும் தான் கட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்கள் வீட்டு பூஜை அறைக்குள் ஒரு ஆணியில் மாட்டி வைக்கலாம். பூஜை அறை வாசலில் மாட்டி வைக்கலாம். நீங்கள் பணம், நகை வைக்கும் பெட்டி இவைகளில் ஒவ்வொரு இலைகளை போட்டு வைத்தாலும் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. எந்த இடத்தில் மா இலைகள் உள்ளதோ, அந்த இடம் ஐஸ்வர்யம் நிறைந்த இடமாக தான் நிச்சயம் இருக்கும்.

பொதுவாகவே மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்தால் அந்த இலைகளை எடுத்து சிலர் அவர்கள் வீட்டு அருகிலேயே காய்ந்த உடன் நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுவார்கள். அப்படி இல்லை என்றால் அந்த இலைகளை மக்கிய உடன் காய்ந்தவுடன் வாரி கொண்டுபோய் போட்டுவிடுவார்கள். இது தான் பெரும்பாலும் மரம் வைத்திருப்பவர்கள் எல்லோர் வீட்டிலும் வழக்கமாக இருக்கும்.

- Advertisement -

ஆனால் வீட்டில் மாமரத்தை வைத்திருந்தால் மட்டும், அந்த மாமரத்திலிருந்து இலைகள் காய்ந்து போய் கீழே விழுந்து இருந்தால், அந்த இலைகளை விஷயம் தெரிந்தவர்கள் கொண்டுபோய் வீட்டிற்கு வெளியே கொட்ட மாட்டார்கள். வீட்டிற்கு உள்ளேயே அந்த மா இலைகளை கொளுத்தி விடுவார்கள். காரணம், மாமரம் என்பது வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை கொடுக்கும் ஒரு மரமாக கருதப்பட்டது.

Maavilai thoranam

நிறைய பேர் வீடுகளில் மா மரம் இருந்தால் வெளியாட்கள் வந்து அந்த மரத்தில் இருந்து மா இலையை பறிப்பதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள். காரணம் வீட்டு ஐஸ்வரியம் வெளியே சென்று விடும் என்பதற்காக. சரிங்க எல்லாம் சரிதான். நிலை வாசலில் கட்டிய மாலைகளை என்னதான் செய்வது என்ற கேள்விக்கான பதில் என்ன? என்று நீங்கள் கேட்பது நன்றாகவே புரிகிறது.

- Advertisement -

Maavilai thoranam

நிலை வாசலில் நம் வீட்டு ஐஸ்வர்யத்தை பெருக்குவதற்காக கட்டி வைத்திருக்கும் மா இலைகள் காய்ந்து விட்டால், அந்த மா இலையை எடுத்து நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள். கையாலேயே நொறுக்கினால், நன்றாக தூளாகி விடும். அப்படி இல்லை என்றால் மிக்சி ஜாரில் போட்டு கூட அதனை தூள் செய்து கொள்ளலாம். அதில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை போட்டு நன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

dhupam

இந்த மாஇலை துகள்களை வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை செவ்வாய் கிழமைகளில் தூபம் போடும் போது அந்த தூபத்தில் கலந்து போட வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் எந்த ஒரு கெட்ட சக்தியும் இருக்காது. வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் வெளியே சென்றுவிடும்.

உங்கள் வீட்டிற்கு ஐஸ்வர்யம் வரவேண்டும் என்பதற்காக நிலை வாசலில் கட்டியிருக்கும் மா இலைகளை குப்பையில் போடாமல், இப்படி செய்தால் உங்கள் வீட்டு ஐஸ்வரியம் உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல், வீட்டுக்குள்ளேயே நிலைத்து இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -