மாங்காய் பச்சடி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். பிறகு மாங்காய் சீசன் முடியும் வரை தினம் தினம் உங்கள் வீட்டில் மாங்காய் பச்சடி தான்.

maangai-pachadi
- Advertisement -

இப்போது மாங்காய் சீசன் அல்லவா. மாங்காயில் விதவிதமான பலகாரங்களை செய்து சாப்பிடலாம். பாரம்பரியமாக நம்முடைய உணவில் இந்த மாங்காய் பச்சடி செய்வது என்பது மிகவும் ஸ்பெஷலான ஒரு விஷயம். குறிப்பாக சித்திரை வருடப் பிறப்பிற்கு இந்த மாங்காய் பச்சடியை நிறைய பேர் களில் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இனிப்பு புளிப்பு காரம் உப்பு எல்லாவகையான சுவையும் சேர்ந்த அருமையான ஒரு மாங்காய் பச்சடி ரெசிபி உங்களுக்காக.

இரண்டு மீடியம் சைஸில் இருக்கும் மாங்காய்களை எடுத்து, ஓரளவுக்கு பெரிய துண்டுகளாக வெட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதாவது மாங்காய் 400 – கிராம், வெல்லம் – 100 கிராம். (மாங்காயை தோல் சீவியும் வெட்டி வைத்துக்கொள்ளலாம். தோல் சீவாமலும் வெட்டி வைத்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் தான். ஆனால் தோலுடன் சேர்த்து மாங்காய் பச்சடி செய்வது அதிக சுவை தரும்.)

- Advertisement -

வெல்லத்தை ஒரு கடாயில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பாகுகாய்ச்ச தேவை கிடையாது. வெல்லம் கரைந்து தூசி இல்லாமல் வடிகட்டி இருந்தால் மட்டும் போதும்.

மாங்காய் பச்சடியை கடாயில் தாளித்து விடலாம். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன், இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய் – 1, வரமிளகாய் – 1, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் தாளித்து நறுக்கி வைத்திருக்கும் மாங்காயை இந்த எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் போல நன்றாக வதக்கி விட வேண்டும். அடுத்தபடியாக உப்பு – 1 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து ஒரு முறை பிரட்டிவிட்டு, 1/4 கப் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி மாங்காயை பக்குவமாக வேகவைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மாங்காய் குழைந்து வந்தாலும் தவறு கிடையாது. ஆனால் சாப்பிடுவதற்கு கொஞ்சம் மாங்காயாக இருந்தால் ருசி அதிகமாக இருக்கும். மாங்காய் வெந்து வந்ததும் தயாராக வைத்திருக்கும் வெல்லக் கரைசலை கடாயில் ஊற்றி மீண்டும் மாங்காயை வெல்லத் தண்ணீரோடு வேக வைக்கவேண்டும்.

வெல்லம் நன்றாகக் கொதித்து வரும்போது பச்சடி அப்படியே கட்டியாக ஜாம் பக்குவத்திற்கு நமக்கு கிடைக்கும். கொஞ்சம் தளதளவென இருக்கும் போது அடுப்பை அணைத்து விடுங்கள். ஏனென்றால் இந்த பச்சடி ஆறிய பின்பு கெட்டித் தன்மை வந்துவிடும். இந்த பச்சடியை சாப்பிட அப்படி ஒரு சுவை இருக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட்டால் அருமை. இதை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் மூன்று நாட்கள் கூட கெட்டுப்போகாமல் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா. இந்த மாங்காய் சீசனில் ஒரு முறை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன். வித்தியாசமான சுவை. சொன்னா புரியாது. சுவைத்தால் தான் புரியும்.

- Advertisement -