உங்கள் வீட்டு சமையலறையில் இனி 3 மாதம் ஆனாலும் கோதுமை மாவில் புழு, பூச்சி, வண்டு பிடிக்காது. இந்த ஒரே 1 பொருளை மட்டும் கோதுமை மாவில் போட்டு வையுங்கள்.

wheat
- Advertisement -

சமையலறையில் நாம் பயன்படுத்தக்கூடிய எந்த மாவு வகையாக இருந்தாலும் இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றி பார்க்கலாம். உதாரணத்திற்கு ஸ்டோர் செய்து வைத்திருக்கும் கோதுமை மாவு, கடலை மாவு, மைதா மாவு, கேழ்வரகு மாவு, இப்படி எல்லாம் மாவு வகைகளிலும் இந்த பொருளை போட்டு வைத்தால் வண்டு பிடிக்காமல் இருக்கும். இதோடு மட்டுமல்லாமல் கோதுமை மாவை பற்றி ஒரு சுவாரஸ்யமான குறிப்பையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சமையலில்  அதிகமாக ஆர்வம் உள்ளவர்கள் இந்த குறிப்பை இறுதி வரை படித்து பயன் பெறுங்கள்.

முதலில் எந்த மாவாக இருந்தாலும் அந்த மாவில் கொஞ்சமாக கல் உப்பை போட்டு கலந்து வைத்தால் எந்த ஒரு பூச்சி பொட்டும் வராமல் இருக்கும். பெரும்பாலும் இந்த குறிப்பு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது அல்லாமல் நம் சமையலறையில் இருக்கும் மிளகுக்கு மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. சமையலறையில் பயன்படுத்தும் மஞ்சள்தூளில் கூட வண்டு பிடிக்கும். ஆனால், இந்த மிளகில் பூச்சி பிடிக்காமல் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

- Advertisement -

இந்த மிளகை தான் மாவில் போட்டு வண்டு வராமல் பாதுகாக்க போகின்றோம். 1 கிலோ அளவு கோதுமை மாவை வைத்து இருக்கிறீர்கள் என்றால், அதில் 10 மிளகை அப்படியே தூவி கலந்து வைக்கலாம். சில பேருக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரும். பிறகு சப்பாத்தி செய்யும்போது மாவு பிசைய எப்படி கோதுமை மாவை பயன்படுத்துவது. மிளகும் சேர்ந்து வராதா என்று. சப்பாத்தி மாவை அளந்து எடுத்து விட்டு அதிலிருந்து மிளகை பொருக்கி எடுத்து மீண்டும் கோதுமை மாவு டப்பாவில் போட்டுக் கொள்ளலாம்.

அப்படி இல்லை என்றால் மெல்லிசான காட்டன் துணியில் 10 மிளகுகளை வைத்து கட்டி இந்த மிளகு முடிச்சை அப்படியே கோதுமை மாவில் புதைத்து வைக்கலாம். ஆனால் நிறைய மாவை ஸ்டோர் செய்து வைத்தால், 5 அல்லது 6 முடிச்சுகளை தயார் செய்து அந்த மாவு டப்பாவில் போட்டு வைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முயற்சி செய்து பாருங்கள். இதே போல கடலை மாவு, மைதா மாவு, கேழ்வரகு மாவு, கம்பு மாவு எந்த மாவு வைத்து இருந்தாலும் அதற்கு இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

சரிங்க, கோதுமை மாவை பற்றி இன்னொரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று இருக்கிறது அல்லவா. அதையும் பார்த்துவிடுவோமா. சமையலறையில் சமைக்கும் போது யாராவது தெரியாமல் சூடான பாத்திரத்தில் சுட்டுக் கொண்டாலோ அல்லது கொதிக்கின்ற எண்ணெய் தெளித்து விட்டாலோ அந்த இடத்தில் உடனடியாக இந்த கோதுமை மாவை எடுத்து தடவி விடுங்கள். ஒரு சிறிய டப்பாவில் கோதுமை மாவை போட்டு ஃப்ரிட்ஜில் வையுங்கள். காயம்பட்ட உடன் ஜில்லுனு இருக்கக்கூடிய இந்த மாவை எடுத்து தீ காயம்பட்ட இடத்தில் வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டால், காயம் பட்ட இடம் கருத்துப் போகாமல் கொப்பளம் வராமல் சீக்கிரம் ஆறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிப்ஸை வீட்டில் இருக்கிற மற்றவர்களிடம் சொல்லுங்க. அப்போது தான் அவசரத்திற்கு அவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.

இறுதியாக இன்னும் ஒரு விஷயம். சப்பாத்தி திரட்டும்போது கோதுமை மாவில் பிரட்டி தானே சப்பாத்தி திரட்டுவோம். இப்படி செய்யும்போது தட்டில் வைத்த மீதமான மாவை நிறையபேர் வீணாக்குவீர்கள். பெப்பர் சால்ட் டப்பாவுக்கு மேலே எல்லாம் சின்ன சின்ன ஓட்டை இருக்கும் அல்லவா. அந்த மாதிரி ஒரு டப்பாவை எடுத்து அதில் கோதுமை மாவைப் போட்டு வைத்து சப்பாத்தி திரட்டும்போது, இந்த டப்பாவோடு எடுத்து பெருங்காயம் தூவுவது போல, கோதுமைமாவை தூவி சப்பாத்தி தேய்த்தால் மாவு நிறைய வீணாகாது. பெருங்காய டப்பா காலியாகி விட்டால், அதை வாசம் போக நன்றாக கழுவி விட்டு, அதிலே கூட கோதுமை மாவை போட்டு சப்பாத்தி தேய்க்கும் போது பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த குட்டி டப்பாவையும் கோதுமை மாவு டப்பாவுக்கு உள்ளேயே போட்டு மூடி வைச்சுட்டா பத்திரமா இருக்கும். மேலே சொன்ன விஷயங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -