மாடி தோட்டம் வைத்திருப்பவர்கள் அதை செழிப்பாக வைத்திருக்க சமையலறையில் இருக்க வேண்டிய ஒரே 1 பொருள் என்ன? இந்த ரகசியம் தெரிஞ்சா இனி உங்க வீட்டு செடிகளும் செலவில்லாமல் செழிக்குமே!

curd-garden-thottam
- Advertisement -

மாடியில் தோட்டம் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் அதை கவனிக்க நிறையவே மெனக்கெடுவார்கள். நீங்கள் வீட்டை சுற்றிலும் வைக்கும் செடி, கொடிகளை விட மாடியில் வைக்கப்படும் செடிகள் ரொம்பவே செழிப்பாக வளர்வதை பார்க்க முடியும். ஏனென்றால் நேரடியாக சூரிய வெளிச்சம் தடையில்லாமல் கிடைப்பதால் ஒவ்வொரு செடிகளும் செழிப்பாக பெரிது பெரிதாக பூக்களையும், காய், கனிகளையும் நமக்கு வாரி வழங்கும். இந்த மாடி தோட்டத்தை செழிப்பாக வைத்திருக்கக் கூடிய ஒரு பொருள் நம்முடைய சமையல் கட்டில் ரகசியமாக ஒளிந்து கொண்டிருக்கிறது. அது என்ன பொருள்? அதை வைத்து நம்முடைய மாடி தோட்டத்தை எப்படி செலவில்லாமல் செழிக்க செய்வது? என்பதைத்தான் இந்த தோட்டக்கலை பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

நம்முடைய மாடியில் பூக்கள் மட்டும் அல்லாமல் காய்கறி செடிகளையும் நிறையவே வைத்திருப்போம். சிறிய சிறிய கனி தரும் எளிய செடிகள் எலுமிச்சை, மாதுளை, சப்போட்டா, கொய்யா போன்றவற்றையும் கண்டிப்பாக வைத்திருப்போம். அது மட்டும் அல்லாமல் உங்களுக்கு பிடித்தமான வித்தியாசமான காய்கறி மற்றும் பழ செடிகள் மட்டும் அல்லாமல் பூக்களும் வைத்திருப்பீர்கள். இவைகள் ரொம்பவே செழிப்பாக செழிக்க நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் இந்த ஒரு பொருள் நிறையவே உதவி செய்யும்.

- Advertisement -

நம் செடி, கொடிகளுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், அயன் போன்ற சத்துக்கள் அனைத்தையும் கிரகித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் இந்த ஒரு பொருளுக்கு உண்டு. அது வேறு எதுவும் அல்ல! ‘தயிர்’ தான் அப்பொருள் ஆகும். நன்கு புளித்த தயிருடன் நீங்கள் ஒரு சில பொருட்களை சேர்க்கும் பொழுது அதனுடைய சத்துக்களை அது முழுமையாக கிரகித்துக் கொள்ளும். இதை எப்படி செடிகளுக்கு கொடுத்தால் செழிப்பாக வளரும்? என்று பார்ப்போம்.

100ml அளவிற்கு நீங்கள் புளித்த தயிர் எடுத்துக் கொண்டால் அதனுடன் ஒரு கப் கோதுமை மாவு அல்லது கடலை மாவு போன்றவற்றை சேர்த்து ஒரு கைப்பிடி அளவிற்கு வெல்லத்தை போட்டு 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு ரெண்டு நாள் ஊற விட வேண்டும். இதில் நுண்ணுயிரிகள் ஏராளம் பெருகும். பெருகிய பிறகு நீங்கள் அதில் 18 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 20 லிட்டராக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நீங்கள் மாடித்தோட்டம் முழுவதும் உரமாக கொடுத்து வந்தால் செடிகள் கொத்துக்கொத்தாக பூத்துக் குலுங்க துவங்கும்.

- Advertisement -

அதே போல புளித்த தயிருடன் நீங்கள் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மீந்து போன டீத்தூள் கலந்து இரண்டு லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, இரண்டு நாள் புளிக்க விட்டு இதே போல 18 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 20 லிட்டராக கரைத்து செடிகளுக்கு கொடுத்து வந்தால் செடிகள் செழிக்கும்.

தயிருடன் டீ தூள் மட்டும் அல்லாமல் நீங்கள் மீந்து போன சாதம், காய்கறி கழிவுகள், பழத்தின் உடைய தோல்கள் போன்றவற்றையும் நீங்கள் போட்டு இதே போல நுண்ணுயிரிகளைப் பெருக செய்து உரமாக மாற்றி 20 லிட்டர் அளவிற்கு சரளமாக தண்ணீர் ஊற்றி கலந்து கரைத்து நீங்கள் உங்களுடைய மாடித் தோட்டத்திற்கு ஒரு ஒரு மக்கு கொடுத்து வந்தால் கூட போதும், எந்த வகையான பூச்செடிகளும், காய்கனிகளும் 10 பைசா செலவில்லாமல் செழித்து வளருமே!

- Advertisement -