மதுரை வீதி கடைகளில் விற்கும் ரோட்டு கடை சால்னாவின் ரகசியம் இதுதானா? கரம் மசாலா கூட சேர்க்காமல் சால்னாவில் அடிக்கும் வாசத்திற்கு காரணம் இந்த அரைவைதான்.

salna_tamil
- Advertisement -

இட்லி தோசை குறிப்பா பரோட்டாவுக்கு இந்த சால்னா செம சைடிஷ். முட்டை தோசை வார்த்து அதன் மேலே இந்த சால்னாவை ஊற்றி சாப்பிட்டால் இந்த மழைக்கு சொல்லவே வேண்டாம். வேற லெவல் டேஸ்ட் இருக்கும். வீட்டில் இருந்தபடியே, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சூப்பரான ஒரு பிளைன் சால்னா எப்படி செய்வது. அதுவும் கரம் மசாலா சிக்கன் மசாலா இல்லாமல், அசத்தலான சுவையில். ரெசிபியை தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வமாக உள்ளதா. வாங்க பார்க்கலாம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை – 1 துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, சோம்பு – 1 ஸ்பூன், பிரியாணி இலை – 1, இந்த பொருட்களை எல்லாம் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும் அதன் பின்பு இதோடு சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 15 பல், பெரிய தக்காளி பழம் – 1, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு வெங்காயம் தக்காளியை மூன்றிலிருந்து நான்கு நிமிடம் நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

வெங்காயம் தக்காளி வதங்கி வந்ததும் புதினா இலை – 10 லிருந்து 15, கொத்தமல்லி தழை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, இந்த பொருட்களை போட்டு ஒரு நிமிடம் வதக்கி பிறகு தேங்காய் துருவல் – 2 கைப்பிடி போட்டு, இஞ்சி பூண்டு விழுது இறுதியாக -1 டேபிள் ஸ்பூன், சேர்த்து இந்த எல்லா பொருட்களையும் கலந்து விட்டு பச்சை வாடை போக வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக அறியாதும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். (இந்த அரவையை ஊற்றி சால்னா செய்தால், கரம் மசாலா தேவையே கிடையாது. சால்னாவில் வாசம் தூக்கும்.)

அடுப்பில் இப்போது கடாயை வைத்து சால்னாவை தாளித்து விடலாம். 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் சோம்பு – 1/2 ஸ்பூன், நீல வாக்கில் நறுக்கிய வெங்காயம் – 1/2 கைப்பிடி அளவு, சின்ன தக்காளி பழம் – நீலவாக்கில் நறுக்கியது பாதி, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு முதலில் நன்றாக வதக்கி விடுங்கள். அந்த வெங்காயம் நன்றாக வதங்கட்டும். தக்காளியும் வதங்கிவிடும்.

- Advertisement -

அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப, மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் போட்டு, ஒரு மூடி போட்டு இந்த சால்னாவை 10 லிருந்து 12 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். (இடையிடையே மூடியை திறந்து கலந்து விடுங்கள் தேவைப்பட்டால் தண்ணீர் கூட ஊற்றிக் கொள்ளலாம்.) சால்னாவின் பச்சை வாடை முழுவதும் நீங்கிய பின்பு மேலே கொத்தமல்லி தழைகளை தூவி சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். இதனுடைய வாசமும் சுவையும் அருமையாக இருக்கும்.

பொதுவாகவே சால்னா என்றால் அதில் சிக்கன் மசாலா, கரம் மசாலா போன்ற பொருட்களை நாம் சேர்ப்போம். ஆனால் மேலே சொன்ன குறிப்பை பின்பற்றி சால்னா வைத்தால் கடையில் வாங்கிய மசாலா பொருட்கள் எதுவுமே தேவை இருக்காது. ஆனால் உங்கள் வீட்டு சால்னா வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும். சுட சுட பரோட்டா இட்லி தோசை அல்லது முட்டை தோசை இவைகளுக்கு இதைத் தொட்டு சாப்பிடுங்க. இந்த மழைக்கு வேர லெவல் டேஸ்ட் கொடுக்கும்.

- Advertisement -