மதுரை ஸ்பெஷல் கார சட்னி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். ஸ்பெஷலான இந்த 1 பொருளை சேர்த்து சட்னி அரைத்தால் 10 இட்லி சாப்பிட்டாலும் பத்தாது.

red-chutney
- Advertisement -

காரச் சட்னி என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி அரைக்கக் கூடிய ஒரு சைடிஷ். இந்த கார சட்னியில் ஸ்பெஷலாக நாம் ஒரு பொருளை சேர்த்து அரைக்க போகின்றோம். வழக்கம்போல கார சட்னி செய்வதற்கும், இந்த முறையில் கார சட்னி செய்வதற்கும் சுவையில் நிறைய வித்தியாசம் தெரியும். மதுரை பக்கத்தில் இந்த சட்னி மிகவும் பிரபல்யமானது. வீட்டில் இருப்பவர்களை சுலபமாக 10 இட்லி தோசை சாப்பிட வைக்க இனி கஷ்டமே தேவையில்லை. இந்த ஒரு சட்னியை அரைத்தாலே போதும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்ப்போம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், புளி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – 2 கொத்து, இந்த பொருட்களை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, சேர்த்து வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி, அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2, சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

தக்காளிப்பழம் வெந்து நன்றாக வதங்கி வந்ததும் தேங்காய்த் துருவல் – 2 கைப்பிடி அளவு சேர்த்து, சட்னிக்கு தேவையான அளவு – உப்பு சேர்த்து ஒரு முறை எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு, புளிக்காத தயிர் – 2 ஸ்பூன் சேர்த்து, 1 நிமிடம் நன்றாக வதக்கி விடுங்கள். இறுதியாக கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளை வாசனைக்காக கடாயில் போட்டு மீண்டும் ஒருமுறை கலந்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

ரொம்பவும் புளித்த தயிரை இதில் சேர்த்தால் சுவை நன்றாக இருக்காது. புளிக்காத தயிரை சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தான். அடுப்பை அணைத்துவிட்டு இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் கெட்டியாக 90% வரை இந்த சட்னியை அரைத்துக் கொள்ளவேண்டும்.

- Advertisement -

அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். 2 ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், வர மிளகாய் தாளித்து அப்படியே மணக்க மணக்க இந்த சட்னியில் கொட்டி கலந்து இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே இதனுடைய சுவை பிடிக்கும். காரச் சட்னியை விட இதனுடைய ருசியில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும்.

மதுரையில் இதை தயிர் சட்னி என்று கூட சொல்லுவார்கள். பெரும்பாலும் மதுரையில் செய்யக்கூடிய காரச் சட்னியில் தயிர் சேர்க்கப்பட்டு இருக்கும். இந்த கார சட்னியில் பச்சை மிளகாய்க்கு பதிலாக வரமிளகாய் வைத்து அரைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். வித்தியாசமான இந்த சட்னியை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -