வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ நாம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய இந்த 6 விஷயங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

sad-smile
- Advertisement -

ஒரு மனிதன் ஒரு முறை தான் பிறப்பு எடுக்கிறான். வாழ்கின்ற இந்த ஒரு வாழ்க்கையில் கோப, தாபங்களுக்கு இடம் கொடுத்து மற்றவர்களையும், நம்மையும் காயப்படுத்திக் கொள்ளாமல் எப்பொழுதும், எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய எளிய விஷயங்களை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் இந்த 6 விஷயங்களை நாம் அறிந்து வைத்துக் கொண்டால் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். அவை என்னென்ன? என்பதை அறிய மேலும் தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

sad-crying4

குறிப்பு 1:
இன்பமும், துன்பமும் ஒருவருக்கு நிலையானது அல்ல! அவை மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கும். காலையில் நீங்கள் அழுது கொண்டிருந்தால் மாலையில் நீங்கள் சிரித்துக் கொண்டு இருப்பீர்கள். எனவே எதற்காகவும் கவலை கொள்ளாமல் எல்லாமே கொஞ்ச நேரம் தான் என்கிற யதார்த்தத்தை உணர்ந்து கொண்டால் மகிழ்ச்சி எப்பொழுதும் உங்களை தொற்றிக் கொள்ளும். இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அதிக நேரம் நம் உடல் நிலையானது ஏற்றுக் கொள்ளாது என்பது தான் உண்மை எனவே அதையும் மீறினால் நீங்கள் தான் அதனைப் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகிவிடும்.

- Advertisement -

குறிப்பு 2:
வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல இன்று ஜெயிப்பவர்கள் நாளை தோல்வியைத் தழுவலாம்! இன்று தோல்வியை தழுவியவர்கள், நாளை வெற்றியடையலாம்! எனவே இந்த யதார்த்தத்தை உணர்ந்து எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? என்று புலம்பக் கூடாது. உங்களை விட அவமானத்தையும், எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு வாழ்பவர்கள் இந்த உலகத்தில் இருக்க தான் செய்கிறார்கள்.

குறிப்பு 3:
நம்முடைய அழுகைக்கும், கவலைக்கும் மிக முக்கிய காரணம் நாம் எதையும் ஆழமாக சிந்தித்துக் கொண்டிருப்பது தான். ஆழமாக ஒரு விஷயத்தைப் பற்றி நாம் யோசித்துக் கொண்டிருந்தால் மிஞ்சியது என்னவோ கவலை தான். அதனால் கிடைக்கப் போவது ஒன்றுமே கிடையாது எனவே எதையும் ஆழமாக யோசிக்க தேவையில்லை, மேலோட்டமாக யோசித்தால் போதுமானது.

- Advertisement -

குறிப்பு 4:
உங்களை வேண்டாம் என்று உதாசீனப்படுத்தியவர்களை நினைத்து எப்பொழுதும் கவலைப்படாதீர்கள். உண்மையாக இருந்த உங்களை வேண்டாம் என்று கூறிய அவர்கள் தான் அதை நினைத்து கவலைப் பட வேண்டுமே ஒழிய, நீங்கள் அல்ல. எனவே அவர்களை உதறி தள்ளிவிட்டு, அதனால் கிடைக்கக்கூடிய அர்த்தமற்ற அழுகையையும், கவலையையும் விடுத்து மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். விலகி செல்பவர்களுக்கு தேடிப்போய் அன்பை காட்ட கூடாது. அவர்களுடைய நினைவுகள் உங்களை பாடாய்படுத்தி எடுத்தால், அதை நீங்கள் ஒரே அடியாய் குழி தோண்டிப் புதைத்து விடுங்கள்.

enemy1

குறிப்பு 5:
துரோகத்தையும் தாங்கும் மனவலிமை தேவை எனவே இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு போல துரோகத்தையும் வாழ்வில் ஒரு அங்கம் என்பதை நினைத்து அதனை ஏற்றுக் கொள்ள இயல்பாக பழகிக் கொள்ள வேண்டும். இழப்புகள் தான் ஒரு மனிதனை இன்னும் பக்குவ படுத்துகின்றன எனவே யாரையும் எளிதாக நம்பாமல், இழப்புகளைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருங்கள். இது தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தத்துவமாகும்.

sad-crying3

குறிப்பு 6:
உங்களுக்கு நீங்கள் தான் முதலாளி மற்றும் உங்களுக்கு நீங்கள் தான் தொழிலாளியும் கூட. எனவே மற்றவர்கள் வந்து நம்மை சமாதான படுத்துவார்கள் என்று காத்துக் கொண்டிருக்காமல் உங்களை நீங்களே ஆறுதல் படுத்திக் கொண்டு தொடர்ந்து முன்னேற பழகிக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களை நம்பி ஒரு பொழுதும் அழுது கொண்டிருக்காதீர்கள். உங்கள் கரங்களும், உங்கள் கண்களை துடைக்கும் என்பதையும் நினைவில் கொண்டால் என்றுமே மகிழ்ச்சியாக இருக்கலாம்.

- Advertisement -