ஒளி ரூபமாக பக்தர்களின் வீட்டிற்கு வந்து காட்சி தரும் பாபா ஜீ – வீடியோ

Baba ji

ஆன்மிகம் என்பது கடலை விட ஆழமான எல்லோராலும் புரிந்துகொள்ள, உணர முடியாத ஒரு விஷயமாகும். “அறிவியலின் எல்லை எங்கு முடிகிறதோ, அங்கிருந்து தான் ஆன்மிகத்தின் எல்லை ஆரம்பமாகிறது” என்று நமது காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருக்கிறார். அப்படி பரபரப்பான பொருள் சார்ந்த வாழ்க்கையில் விரக்தியடைந்து, மன அமைதிக்காக பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரே தேர்வு “ஆன்மிகம்”மட்டுமே. அப்படியான நமது ஆன்மிகத் தேடலில் நமக்கு குருவாகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர்கள் தான் “சித்தர்கள், மகான்கள், ஞானிகள்”. இந்த மகாபுருஷர்கள் தங்களை வேண்டுபவர்கள் பலருக்கு இம்மகான்கள் உயிருடன் இருக்கும் காலத்தில் உருவமாகவும், மறைந்த பின் அருவமாகவும் உதவியிருக்கின்றனர். இக்காணொளியில் அப்படி அருவமாக ஒரு “மகா யோகி” தன்பக்தர்களுக்கு காட்சி தந்ததைப் பற்றி பார்ப்போம்.

திரு.ரஜினிகாந்த் அவர்கள் நடித்த “பாபா” திரைப்படத்தின் மூலம் பெரும்பாலானோர்களால் அறிந்துகொள்ளப்பட்டவர் “மஹாவதார் ஸ்ரீ பாபா”. இம்மகாயோகியின் பூர்வீகம் நம் தமிழ்நாடு என்பது பெரும்பாலானோர் அறியாத செய்தி. தன் தவத்தால் அற்புத ஆற்றல்களைப் பெற்ற இம்மகான் தன் ஊணுடலைத் துறந்து, “ஒளிஉடம்பைப்” பெற்று “2000” ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக இவரை வழிபடுபவர்கள் கூறுகிறார்கள்.

இம் மகா அவதார் பாபா அவர்கள் தன்னை உண்மையாக வழிபடுபவர்கள் சிலருக்கு கனவின் மூலம் காட்சி தருவதாக கூறப்படுகிறது. வேறு சில பக்தர்களுக்கோ அவர்களின் இல்லத்திற்கே பாபா அவர்கள் மிகப் பிரகாசமான “ஒளி உடம்புடன்” வருவதாகவும், அவர் வந்ததற்கு அடையாளமாக மிகச் சிறந்த நறுமணம் இல்லம் முழுக்க வீசுவதாகவும் அவ்வனுபவத்தைப் பெற்றவர்கள் மெய்சிலிர்க்கின்றனர். தன் மீது அன்புடன் இருக்கும் பக்தர்களக்குக்காக மகான்கள் எத்தகைய அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்ற தகவலுக்கு வலுசேர்க்கிறது இந்த நிகழ்வு.