நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி. நவகிரகங்களின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள நாளை விநாயகருக்கு இந்த மாலை போட்டு வழிபாடு செய்யுங்கள்.

vinayagar
- Advertisement -

வருடத்தில் வரக்கூடிய மற்ற சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்கின்றோமோ இல்லையோ, நாளை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை அனைவரும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். காரணம் இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபாடு செய்தால், வருடம் முழுவதிலும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்ட பலனை பெறலாம். அப்படி ஒரு மகத்துவம் பெற்ற சிறப்பு வாய்ந்த நாளைய தினத்தில் விநாயகரது வழிபாட்டை சுலபமான முறையில் எப்படி மேற்கொள்வது என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான குறிப்புகளை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு காலை 6 மணிக்கு உங்கள் வீட்டு பூஜை அறையில் விநாயகரின் படத்தை சுத்தம் செய்து பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். விநாயகரின் சிலை இருந்தால் அந்த சிலைக்கு கட்டாயம் பால் அபிஷேகம் செய்து விநாயகர் சிலைக்கு அருகம்புல் சாத்தி மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து தீபம் ஏற்றி விரதத்தை தொடங்க வேண்டும்.

- Advertisement -

வழக்கம் போல தான் விரதம் இருப்பது என்பது அவரவருடைய உடல் சௌகரியத்தை பொறுத்தது. சாப்பிடாமல் விரதம் இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம், அல்லது சாதம் சாப்பிடாமல் பழவகை பால் போன்ற பொருட்களை சாப்பிட்டு விரதம் இருப்பவர்கள் இருக்கலாம். அது அவரவர் விருப்பம் தான். சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்பது மாலை நேரத்தில் செய்வது தான் சிறப்பு. மாலை 6 மணிக்கு மேல் சந்திரன் உதயமாகும் சமயத்தில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, விநாயகருக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பிரசாதத்தை நிவேதனமாக வைத்து விளக்கேற்றி கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து, விநாயகருக்கு வைத்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பூஜையின் போது உங்களுக்கு தெரிந்த விநாயகரின் மந்திரம் ஏதாவது இருந்தால் அதை சொல்லலாம்.

பூஜையின் போது விநாயகரின் முன்பு அமர்ந்து மனதார சிறிது நேரம் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் சங்கடங்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இது பொதுவாக வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு.

- Advertisement -

நாளைய தினம் கோவிலில் காலையிலேயே விநாயகருக்கு அபிஷேகம் நடக்கும். உங்களால் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய எந்த பொருளை வாங்கித் தர முடியுமோ அந்த அபிஷேக பொருளை வாங்கி கொடுக்கலாம். உதாரணத்திற்கு பால் இளநீர் தயிர் சந்தனம் இப்படிப்பட்ட பொருட்களை அபிஷேகத்துக்கு வாங்கி கொடுக்கலாம்.

மாலையில் எல்லா கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். அந்த சமயத்தில் கோவிலுக்கு சென்று விநாயகர் சன்னதியில் அமர்ந்து உங்களுடைய கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், திருமண தடை உள்ளவர்கள், குழந்தையை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்கள், புதிய முயற்சிகளில் தோல்வி அடைபவர்கள், எல்லாம் நாளைய தினம் விநாயகருக்கு அவரவர் கையால் அருகம்புல்லை கட்டி மாலையாக போட வேண்டும்.

இப்போது எனக்கு நேரமே சரியில்லை. எதை தொட்டாலும் தோல்வி சண்டை சச்சரவு. வாழ்க்கையில் ஒரு நல்ல காரியம் கூட நடக்கவே இல்லை என்பவர்கள் விநாயகருக்கு தேங்காய் மாலையை கட்டி போடலாம். நீண்ட நாட்களாக ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக முயற்சி செய்து வருவீர்கள். அந்த காரியம் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? இந்த வேலை கிடைக்குமா கிடைக்காதா? என்ற பதிலே தெரியாமல் குழம்பிக் கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் நாளை தினம் விநாயகருக்கு ஒரே ஒரு சிதற தேங்காய் உடைத்து, தேங்காய் மாலையை விநாயகருக்கு கட்டி போட்டால் உங்களுடைய குழப்பங்களுக்கு எல்லாம் நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

ஜாதக கட்டத்தில் சந்திர பகவானால் தோஷம் உள்ளவர்கள் ராகு கேது தோஷம் உள்ளவர்கள் சனிபகவானால் பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் நாளைய தினம் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை 9 முறை வலம் வந்து தோப்பு கரணங்கள் போட்டு, அருகம்புல் சாத்தி விநாயகரின் பாதங்களை இறுக்கப்பற்றிக் கொள்ளுங்கள். எந்த கிரகங்களும் உங்களுக்கு தொந்தரவை கொடுக்காது. இந்த மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்பவர்கள். அனைவருக்கும் கூடிய சீக்கிரத்தில் நல்ல காலம் பிறக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -