Maha shivaratri 2019 : நாளை மகா சிவராத்திரி. இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு

mahasivrathiri
- Advertisement -

ஆடற்கூத்தன் என்று சிவபெருமானுக்கு ஒரு பெயர் உண்டு. தனது திருநடனத்தால் உலகம் அனைத்தையும் ஆட்டுவிப்பவராக சிவ பெருமான் இருக்கிறார். பிரபஞ்சத்தின் அனைத்துமாகி இருக்கும் சிவபெருமானை உலகம் முழுவதும் பல கோடி கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர்.அதிலும் சிவனை வழிபடவும், அந்த சிவனில் நம்மை ஒருங்கிணைக்கவும் செய்கின்ற ஒரு அற்புத நாளாக மகா சிவராத்திரி தினம் இருக்கிறது. அன்றைய தினத்தில் சிவனின் அருளை பெற நாம் செய்ய வேண்டியது குறித்து இங்கு தெரிந்து கொள்ளாலாம்.

sivan

மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வருகிற ஒரு அதி அற்புத நாளாக மகா சிவராத்திரி தினம் இருக்கிறது. முதல் நாளன்று ஒருவேளை உணவு உண்டு, சுக போகங்கள் அனுபவிக்கும் எண்ணங்களையும், செயல்களையும் தவிர்த்து மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது சூரிய பகாவானை வணங்கிய பின்பு, அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானை வணங்க வேண்டும். கோயிலில் வழிபாடு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், பூஜையறையில் சிவராத்திரி பூஜை செய்வதாற்கான இடத்தைச் நன்கு சுத்தம் செய்து, பூமாலைகள், தோரணங்கள் கட்டி அலங்கரிப்பது நல்லது.

- Advertisement -

நண்பகலில் நீராடி, உங்கள் வீட்டிலேயே சிவபெருமானுக்கு உச்சி கால பூஜைகளை முடித்து விடவேண்டும். பின்பு உங்கள் வீட்டருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்கான மலர்கள், பழங்கள், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் இதர பூஜை பொருட்களை தந்து விட்டு மீண்டும் வீடு திரும்ப வேண்டும். மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, முன்பு பூஜையறையில் சுத்தம் செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிறிய அளவில் சிவலிங்கத்தை வைத்து முன்னிரவு தொடங்கி நான்கு ஜாமங்களிலும் சிவ மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து பூஜைகள் செய்ய வேண்டும்.

sivastakam

நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை சிவ லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும். திரிகரண சுத்தி மற்றும் ஆச்சாரமாக இத்தகைய சிவ பூஜைகளை செய்ய இயலாதவர்கள். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டு, சிவனை வழிபட்டு சிவனருள் பெறலாம். அன்று இரவு முழுவதும் சில சிவன் கோயில்களில் சிவபுராண உபன்யாசம் நடைபெறும். அந்த உபன்யாசத்தை கேட்பதால் புண்ணிய பலன் பெருகும். மேலும் உங்கள் வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி கேட்கலாம் அல்லது அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி சிவ தியானம் செய்யலாம்.

- Advertisement -

nachadai-neekiya-sivan

இரவு கண்விழிப்பதற்காக சிவ ராத்திரி தினத்தின் பகல் வேளையில் உறங்க கூடாது. மேலும் சிவராத்திரி இரவு கண் விழிக்க வேண்டும் என்பதற்காக தொலைக்காட்சி, கைபேசி போன்ற பொழுது போக்கு சாதனங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே சிவராத்திரி தின விரதம் இருந்ததற்கான சிவ பெருமானின் முழுமையான அருளை நாம் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:
திருப்பதியில் இங்கு வழிபட்டால் எத்தனை நன்மை தெரியுமா

இது போன்று மேலும் பாலா சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Maha shivaratri in Tamil. It is also called as Shivaratri vratham in Tamil or Shiva pooja in Tamil or Shivaratri pooja in Tamil or Sivarathiri magimai in Tamil or Sivarathiri in Tamil.

- Advertisement -