மகா சிவராத்திரியன்று சிவபெருமானை எத்தனை முறை வலம் வந்தால் என்னென்ன பலன் கிடைக்கும்?

சிவராத்திரி அன்று விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் வரிசையில் மனிதர்கள் மட்டும்தான் உள்ளார்களா? என்று கேட்டால் அது இல்லை. அந்த தெய்வங்களும், சிவபெருமானை சிவராத்திரி அன்று நினைத்து விரதமிருந்து பல பலன்களை பெற்றுள்ளார்கள் என்று கூறினாள் நம்பித்தான் ஆகவேண்டும். அந்த வரிசையில்

god siva

பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்கியது சிவராத்திரி விரதம் இருந்து தான்.

பிரம்ம தேவன் சரஸ்வதியின் கரம் பிடித்தது சிவராத்திரி விரதம் இருந்துதான். மகா விஷ்ணு லட்சுமியின் கரத்தைப் பிடித்தது சிவராத்திரி விரதம் இருந்து தான்.

முருகப்பெருமான் சிவராத்திரியன்று விரதம் இருந்துதான் சிவனின் அருளை பெற்றார்.

சிவராத்திரியன்று விரதம் இருந்து இந்திரன் தேவலோகத்தின் பதவியை பெற்றார்.

- Advertisement -

சிவராத்திரியன்று விரதம் இருந்துதான் செல்வத்திற்கு அதிபதியானார் குபேரர்.

Arthanareswarar

சிவராத்திரியன்று விரதம் இருந்துதான் பார்வதிதேவி சிவனின் இடது பக்கத்தைப் பெற்றார். அர்த்தநாரீஸ்வரர் அவதாரம்.

சிவராத்திரி அன்று தவமிருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த பகீரதன்.

மார்க்கண்டேயனுக்காக, எமனை காலால் சிவபெருமான் எட்டி உதைத்தும் சிவராத்திரியன்றுதான்.

பிரம்மாவும் விஷ்ணுவும், சிவபெருமானின் அடி முடி தேடி சென்றபோது நெருப்புப் பிழம்பாக அவதாரம் எடுத்ததும் சிவராத்திரி அன்று தான்.

இப்படியாக எம்பெருமானை நினைத்து வழிபட்ட தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும் வரத்தை பெற்றது இத்திருநாளில் தான் என்பதை நாம் நினைவு கூற வேண்டியது மிகவும் அவசியம்.

மனிதப் பிறவியில் இருக்கும் நாம் தவத்தால் சிவபெருமானின் அருளை பெற முடியாவிட்டாலும், அந்த எம்பெருமானை உண்ணாமல், உறங்காமல், வில்வ இலையால் அர்ச்சனை செய்து, வழிபட்டு வரத்தினை பெற்று விடலாம். இப்படியாக எத்தனை முறை எம்பெருமானை வலம் வந்தால் என்னென்ன பலன்களை பெறமுடியும் என்பதை பற்றியும் இத்திருநாளில் நாம் தெரிந்து கொள்வோம்.

pradhakshanam

1 முறை சுற்றினால் இறைவனை அணுக முடியும்.

3 முறை சுற்றினால் மனதிலிருக்கும் பாரங்கள் குறையும்.

5 முறை சுற்றினால் இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழலாம்.

7 முறை சுற்றினால் எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம்.

9 முறை சுற்றினால் எதிரிகளின் தொல்லை இருக்காது.

11 முறை சுற்றினால் ஆயுள் அதிகரிக்கும்.

13 முறை சுற்றினால் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும்.

sivan-temple

15 முறை சுற்றினால் பணவரவு அதிகரிக்கும்.

17 முறை சுற்றினால் வீட்டில் தானியத்திற்கு எந்த குறைவும் இருக்காது.

19 முறை சுற்றினால் நோய் நொடியற்ற வாழ்க்கையை பெறலாம்.

21 முறை சுற்றினால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

23 முறை சுற்றினால் சவுகரியமான வாழ்க்கைக்கு எந்த குறையும் வராது.

108 முறை சுற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

208 முறை சுற்றினால் அதிர்ஷ்டமான, யோகமான, அனைத்து செல்வங்களையும் பெறக்கூடிய வாழ்க்கையைப் பெறலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது இந்த தவறை செய்யாதீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Maha shivaratri palangal in Tamil. About maha shivaratri in Tamil. Maha sivarathiri viratham. Maha shivaratri 2020 in Tamil.