நாளை(11/3/2021) மகா சிவராத்திரி முறையாக விரதம் இருப்பது எப்படி? சிவராத்திரியில் செய்யக்கூடியதும்! செய்யக்கூடாததும்!

sivan

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி அன்று எம்பெருமான் ஈசனை வழிபடுவது பிறவிப்பிணி நீங்கி முக்தியை அளிக்கும். அதிலும் குறிப்பாக மகா சிவராத்திரி அன்று தெரிந்தும், தெரியாமலும் ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு திடீர் ராஜ யோகம் ஏற்படும் என்பது ஐதீகம். இதற்கு புராண வகைகளில் பல்வேறு கதைகளும் உண்டு. மகா சிவராத்திரி நன்னாளில் எல்லா சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள் நடைபெறுவது உண்டு. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும். நினைத்த எல்லாமே நினைத்தபடியே நடக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. இன்றைய நாளில் செய்யக்கூடியதும்! செய்யக்கூடாததும் என்னென்ன? வீட்டில் முறையாக விரதம் இருப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

runavimosana-lingam

மகாசிவராத்திரி அன்றைய நாள் வீடு முழுவதும் துடைத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மகா சிவராத்திரி அன்று கட்டாயம் சிவன் கோவிலுக்கு சென்று வர வேண்டும். வீட்டில் பூஜை செய்ய நினைப்பவர்கள், லிங்கம் அல்லது சிவன் படம் வைத்திருக்க வேண்டும். தொமகா சிவராத்திரி விரதம், டர்ந்து சிவ மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் உச்சரிக்க வேண்டும். வில்வ இலைகளை முன்னரே பறித்து வைத்துக் கொள்வது நல்லது.

மகா சிவராத்திரி நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அல்லது பால் மற்றும் பழம் சாப்பிட்டு கூட விரதம் இருக்கலாம். அது அவரவர்களின் உடம்பை பொறுத்தது. மகா சிவராத்திரி விரதம் கடை பிடிப்பவர்கள் கட்டாயம் மறுநாள் மாலை வரை தூங்காமல் அவரை நினைத்து தியானிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பொழுது போக்க கூடாது. இப்படி முறையாக வழிபடும் போது கிடைக்கும் பலன்களும் ஏராளம்.

lingam-vilva-archanai

ஒரு காட்டில் வேடன் ஒருவன் வேட்டையாட வந்தான். அந்த வேடன் திடீரென ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டான். புலியை பார்த்ததும் வேகமாக ஓடி ஒரு மரத்தின் மேல் அமர்ந்து கொண்டான் வேடன். புலியும் அங்கிருந்து நகர்ந்த பாடில்லை. நேரம் கடந்து செல்ல செல்ல இரவு நேரம் நெருங்கியது. சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பித்தது. இருப்பினும் புலி அங்கிருந்து நகரவே இல்லை. பசியில் வாடிய வேடனுக்கு தூக்கமும் வரவில்லை. தூங்கினால் எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயமும் உண்டு. அவன் ஏறிய மரம் வில்வ மரம் ஆகும்.

- Advertisement -

தூங்காமல் இருப்பதற்கு ஒவ்வொரு இலைகளாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். அன்றைய நாள் மகாசிவராத்திரி ஆகும். விடியும் வரை இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. சூரியன் உதயமானதும் புலி அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது. பயம் நீங்கி மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான் வேடன். உடனே சிவபெருமான் அவன் முன் தோன்றி காட்சி புரிந்தார். வேடனும் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றான். அவன் மகா சிவராத்திரி நன்னாளில், வில்வ மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தது சிவபெருமான் மீது தான். ஏனென்றால் அந்த இடத்தில் லிங்கம் ஒன்று இருந்தது அவன் கவனிக்கவில்லை. தெரிந்தோ! தெரியாமலோ! மகாசிவராத்திரியன்று வில்வ இலைகள் கொண்டு லிங்கத்திற்கு அர்ச்சனை செய்ததால் வேடன் அந்த நாட்டிற்கே மன்னனாக முடிசூட்டப்பட்டான்.

sunai lingam

இப்படியிருக்க மகா சிவராத்திரி நன்னாளில் நாமும் இரவு முழுவதும் கண்விழித்து, சிவபெருமான் நாமங்களை உச்சரித்து, வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் வேண்டிய வரம் எல்லாம் கிடைக்கும். வரம் கொடுப்பதில் வல்லவராக இருக்கும் சிவபெருமானை மகிழ்விக்க இதைவிட சிறந்த நாள் இல்லை என்று கூறலாம். ஆகவே இந்த நாளை தவறவிடாமல் பக்தர்கள் அனைவரும் சிவபெருமான் அருள் பெற விரதம் மேற்கொண்டு, சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்வது உத்தமம்.

runavimosana-lingam

உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுங்கள். இதனால் உங்களுக்கு சகல செல்வங்களும் உண்டாகும். மறுநாள் விரதத்தை முடித்து உணவு அருந்தலாம். ஆனால் அன்றும் பகலில் தூங்கக்கூடாது என்பது சாஸ்திர விதியாகும். மகா சிவராத்திரிக்கு மறுநாள் மாலை வேளையில் சிவனுக்கு பூஜைகள் செய்த பின்னர் தான் நீங்கள் தூங்க வேண்டும். இப்படி முறையாக மகாசிவராத்திரி பூஜையை கடைபிடித்து எல்லா பயனும் பெறுங்கள்.