மகாலட்சுமி உங்கள் இல்லம் தேடி வருவதற்கு குடும்பத்தில் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள் என்னவென்று தெரியுமா?

gaja-lakshm
- Advertisement -

ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்க செல்வமானது குறையாமல் இருக்க வேண்டும். அள்ள அள்ள குறையாத செல்வமும், வறுமை இல்லாத நிலையையும் பெற மகாலட்சுமியின் அருள் அந்த குடும்பத்திற்கு தேவை. காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மகா லட்சுமி கடாட்சத்தை காண முடியும். இந்த வகையில் பெண்கள் இந்த 3 விஷயங்களை தவறாமல் கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் மகாலட்சுமியின் வருகை நிச்சயம் இருக்கும் என்கிறது சாஸ்திரம். அந்த மூன்று விஷயங்கள் என்னென்ன? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

முதலாவதாக காலையில் எழுந்ததும் நாம் போடும் கோலத்தை பார்த்து நம் வீட்டிற்குள் மகாலட்சுமி வருகை புரிகிறாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கோலம் போடாத இல்லத்திலும், சரியாக வாசலை பராமரிக்காத இல்லத்திலும் மகாலட்சுமி உள்நுழைவது இல்லை என்று கூறுவதை கேட்டிருப்போம். இப்படி நீங்கள் எழுந்து கோலம் போடுவதற்கு முன் கதவை திறக்கும் பொழுது ‘மகாலட்சுமியே வருக’ என்று மூன்று முறை உச்சரிக்க வேண்டும். பின்னர் வலது கையால் கதவைத் திறக்க வேண்டும். சூரியன் உதயமாவதற்கு முன்பே வாசலை கூட்டி, பெருக்கி, தண்ணீர் தெளித்து அதில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டு விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது மகாலட்சுமி காலையிலேயே உங்கள் இல்லம் தேடி வந்து விடுகிறார் என்பது ஐதீகம்.

- Advertisement -

வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள பொருட்கள் ஆக இருக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றை நீங்கள் கொடுத்து அனுப்பும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் நிச்சயம் உங்களுடைய இல்லத்தில் மகாலட்சுமி எப்போதும் சம்மணம் போட்டு அமர்ந்து கொள்வாள். இல்லத்திற்கு வந்து செல்லும் பெண்களுக்கு ரவிக்கை துணியுடன் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து கொடுத்தால் கூடுதல் சிறப்பு.

வீட்டிற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுக்க வேண்டும். பின்னர் வழி அனுப்பும் பொழுது இது போல மங்கலப் பொருட்களை கொடுத்து அனுப்பினால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்திருக்கும். வெள்ளிக்கிழமையில் செய்யக்கூடாத விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று கடன் கொடுப்பது என்பது ஆகும். அதேப ோல வீட்டில் வெள்ளிக்கிழமையின் போது உப்பு ஜாடியை துடைத்து வைக்கக் கூடாது. அது போல குழம்பு மிளகாய் தூள் அரைப்பதற்கு அடுப்பில் எதையும் போட்டு வறுக்க கூடாது.

- Advertisement -

அதே போல் அரிசி கட்டாயம் வறுக்கக் கூடாது. அன்றைய நாள் அரிசிப் புடைக்கவும் கூடாது. இதையெல்லாம் நீங்கள் முந்தைய நாளே செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக் கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும். விளக்கு வைத்த பின்பு வெளியில் செல்லக்கூடாது. குப்பைகளை வெளியில் கொட்டுவது, தலை வாருவது, பேன் பார்ப்பது, பால், தயிர் போன்ற பொருட்களை கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவது, பச்சை காய்கறிகளை தானம் செய்வது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது.

அந்த நாளில் பாலை பொங்க விடவும் கூடாது. பால் பொங்குவதற்குள் நாம் அடுப்பை அணைத்து விட வேண்டும். சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கொடுக்கும் பொழுது முதலில் நீங்கள் குங்குமம் வைத்த பிறகு தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது போல் சில விஷயங்களை வெள்ளிக்கிழமையில் கடைப்பிடிப்பதன் மூலமும் குடும்பத்தில் மகாலட்சுமி நிரந்தரமாகத் தங்கி விடுகிறாள். எனவே மேற்கூறிய விஷயங்களில் செய்ய வேண்டியதை செய்தும், செய்யக் கூடாததை தவிர்த்தும் வந்தால் கட்டாயம் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வருகை புரிந்து, உங்களுடனேயே நிரந்தரமாக தங்கவும் செய்வாள்.

- Advertisement -