மகாலட்சுமிக்கு உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணமே வராது. தினமும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால்.

mahalakshmi
- Advertisement -

மகாலட்சுமியை வசியம் செய்வதற்கு நிறைய வழிபாட்டு முறைகள் நமக்கு ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மகாலட்சுமிக்கு விருப்பமான சில பொருட்களை எண்ணெயில் சேர்த்து, அந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவதன் மூலம் அந்த தீபத்தின் வாசத்தில் மகாலட்சுமி உங்கள் வீடு முழுவதும் நிறைந்திருப்பாள். உங்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணமே லட்சுமி தேவிக்கு வராதாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த சிறப்பு வாய்ந்த ஒரு எண்ணெயை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சுத்தமான நல்லெண்ணெய் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு 1 லிட்டர் அளவு நல்லெண்ணெய் ஆக வாங்கினால், இந்த எண்ணுக்கு ஒரு கைப்பிடி அளவு துளசி இலை, ஒரு கைப்பிடி அளவு தாமரை இதழ்கள், ஒரு கைப்பிடி அளவு வில்வ இலை, ஒரு கைப்பிடி அளவு மல்லிகைப் பூ, இந்த பொருட்கள் தேவைப்படும்.

- Advertisement -

அடுப்பில் எச்சில் படாத ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வாங்கிய நல்லெண்ணையை ஊற்றி விடுங்கள். மேலே சொன்ன நான்கு பொருட்களையும் அந்த எண்ணெயில் போட்டு விட்டு, அடுப்பைப் பற்றவைத்து மிதமான தீயில் எண்ணெய்யை அப்படியே சூடு செய்ய வேண்டும். நாம் சேர்த்த பொருட்களின் சாறு அனைத்தும் அந்த எண்ணெயில் இறங்கிய பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். 15 லிருந்து 20 நிமிடங்கள் எண்ணெயை சூடு செய்தால் கூட போதுமானது.

இந்த எண்ணெய் நன்றாக ஆறிய பின்பு, ஒரு வடிகட்டியில் மூலமோ அல்லது வெள்ளைத் துணியின் மூலமோ எண்ணெயை முழுமையாக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். தயாரான இந்த எண்ணெயில் கொஞ்சமாக பச்சைக்கற்பூரம், கொஞ்சமாக கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து தீபமேற்ற பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

காலை மாலை இரண்டு வேளையும் இந்த நல்லெண்ணையை ஊற்றி தீபம் ஏற்றலாம். உங்களால் முடிந்தால், பசு மாட்டின் நெய் கிடைத்தால், அந்த நெய்யை வாங்கி நீங்கள் தயார் செய்த இந்த எண்ணெயோடு கலந்து கொள்ளலாம். அதாவது 1/2 லிட்டர் நல்லெண்ணெய் உங்களுக்கு கிடைத்திருந்தால், 1/2 லிட்டர் அளவு பசு நெய்யை அந்த எண்ணெயோடு கலந்து மகாலட்சுமிக்கு, ஒரு மண் அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி, பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றுவது வீட்டிற்கு அத்தனை லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளிக்கிழமை முழுவதும் இந்த தீபம் உங்கள் வீட்டில் ஏற்றினால், உங்கள் வீடே கமகமக்கும் வாசனையோடு இருக்கும். வீட்டிற்குள் நுழைபவர்கள், உங்கள் வீட்டில் இருக்கும் தெய்வீக கடாட்சத்தை உணர முடியும். ‘ஒரு கோவிலுக்குள் நுழைவது போல் உணர்வு ஏற்படுகிறது’ என்று யோசிப்பார்கள். அந்த அளவிற்கு வாசம் கொண்ட எண்ணெய் தான் இது. நிச்சயமாக இந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் மகாலட்சுமி மயங்கி உங்கள் வீட்டிலேயே இருந்து லட்சுமி கடாட்சத்தை கொடுத்துக் கொண்டே இருப்பாள். நம்பிக்கையுள்ளவர்கள் சிரமம் பார்க்காமல் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -