மகாலட்சுமியை வசியம் செய்ய உதவும் எளிய பரிகாரம்

amman-8

பண கஷ்டத்தினால் பல குடும்பங்கள் நிலைகுலைந்து போகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் அந்த வீட்டில் மகாலட்சுமி குடி இல்லாததே. மகாலட்சுமியை நம் வீட்டில் தங்கவைக்க ஒரு சிறந்த பரிகாரம் உள்ளது. அதை எப்படி செய்வதென்று பார்ப்போம் வாருங்கள்.

mahalakshmi

இந்த பரிகாரத்தை செய்ய நினைப்போர் வெள்ளிக்கிழமை அன்று ஒரு பெரிய மனையை எடுத்துக்கொண்டு அதை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்பு இரவு 9 மணி அளவில் அந்த மனையை மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு வைத்து அதில் குங்குமத்தினால் ‘ஸ்ரீம்’ என எழுதி மனையின் மேல் 6 அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான நெய்யை ஊற்ற வேண்டும்.

6 விளக்குகளுக்கு ஏற்றவாறு 6 தாமரை திரிகளை எடுத்துக்கொண்டு அதை குங்குமத்தால் குழைக்கப்பட்ட நீரில் சிறிதளவு நனைத்து பின்பு அந்த திரிகளை விளக்கில் இட்டு விளக்கேற்ற வேண்டும்.

mahalakshmi

வீட்டில் உள்ள பண பிரச்சனைகள் அனைத்து விரைவில் தீர வேண்டும், வீட்டில் செல்வம் சேர வேண்டும் என்று மகாலட்சுமியை மனதார வேண்டிக்கொண்டு கீழே உள்ள ‘ஸ்ரீம்’ மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். பிறகு மகாலட்சுமிக்கு நம்மால் முடிந்த அளவு கற்கண்டை நிவேதியம் செய்யவேண்டும்.

- Advertisement -

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

அடுத்தநாள் காலை, மகாலட்சுமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட கற்கண்டை 9 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். மீதமுள்ள கற்கண்டை வீட்டில் உள்ளவர்கள் உண்ணலாம். ஆனால் நாம் உன்ன வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கான கற்கண்டை மிச்சப்படுத்த வேண்டாம்.

mahalakshmi

இதையும் படிக்கலாமே:
எம பயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் ருத்திர காயத்ரி மந்திரம்

இந்த பூஜையை தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகள் செய்து வர, வீட்டில் செல்வம் சேர ஆரமிக்கும். இந்த 21 வாரமும் அசைவ உணவை உண்ணாமல் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த பூஜையை முறையாக செய்வதன் மூலமாக எப்பேர்ப்பட்ட பண பிரச்சனைகளில் இருந்தும் விடுபட்டு நல்ல முன்னேற்றத்தை பெறலாம்.