நாளை மகாளய பட்ச முதல் நாள் வாசலில் இப்படி தீபம் ஏற்றினால் தோஷம் சாபம் நீங்கி முன்னோர்களின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.

vasal
- Advertisement -

அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அதிலும் இந்த ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை முக்கியமானதாக இருக்கிறது. இந்த மூன்றில் புரட்டாசி அமாவாசை இன்னும் விசேஷமானது. இதற்குக் காரணம் இந்த அமாவாசையில் தான் வருடம் தோறும் திதி கொடுக்க முடியாதவர்கள் இதில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வார்கள்.

அப்படி முன்னோர்களின் அருளை பெறக் கூடிய இந்த முக்கியமான நாளில் நாம் ஏற்றக் கூடிய ஒரு தீபம் நம்மை சுற்றி இருக்கக் கூடிய தோஷங்கள், துன்பங்கள், முன்னோர் சாபம் அனைத்தையும் நீக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மகாளய பட்ச முதல் நாள் ஏற்ற வேண்டிய தீபம்

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் மகாளய பட்ச நாட்களாகும். இந்த 15 நாட்களும் இறந்தவர்கள் நம்மை காண வருவார்கள் என்பது ஐதீகம் இந்த 15 நாட்களும் நாம் முன்னோர்களை நினைத்து செய்யும் சிறு வழிபாடு கூட நம்முடைய குடும்பம் பெருமளவில் தழைக்க செய்யும்.

அப்படியான இந்த மகாளய பட்ச தினமான நாளை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் ஒரு தட்டில் கொஞ்சம் கல் உப்பை நிரப்பி அதன் மேல் அகல் விளக்கை வைத்து எண்ணெய் ஊற்றி வீட்டு வாசலில் ஒரு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அதே போல் மாலை 5:30 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.மாலை தீபம் ஏற்றிய பிறகு இந்த கல் உப்பை எடுத்து பத்திரமாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கல்லுப்பை தண்ணீரில் கரைத்து வீடு சுற்றிலும் தெளித்து விட்டால் போதும். உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் பீடை, தரித்திரம், தோஷம், முன்னோரகள் சாபம் அனைத்தும் நீங்குவதுடன் நீங்கள் ஏற்றும் இந்த தீபமானது முன்னோர்கள் உங்கள் வீடு தேடி வர வழி வகுக்கும்.

இதையும் படிக்கலாமே: மன அழுத்தம் குறைய பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய வழிபாடு

நம் எத்தனை ஆலயம் சென்று வழிபட்டாலும் எத்தனை பூஜை செய்தாலும் முன்னோர்களின் அருளோ ஆசியோ இல்லாத பட்சத்தில் எதுவும் பயனளிக்காது. ஆகவே முன்னோர்கள் நம் இல்லம் தேடி வர இந்த தீபத்தை ஏற்றி இந்த தண்ணீரையும் வீட்டில் தெளித்து அவர்களுக்கான வழிபாடுகளை முறையாக செய்து குடும்பம் என்றென்றைக்கும் நிம்மதியாக வாழ வழி தேடி கொள்ளுங்கள்.

- Advertisement -