மன அழுத்தம் குறைய பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய வழிபாடு

pournami
- Advertisement -

மனோகாரகன் சந்திரன். மனசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் பௌர்ணமி அன்று சந்திர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். சந்திர பகவான் வழிபாடு நமக்கு மன அழுத்தத்தை குறைக்கும். இன்று பல பேர் தங்களுடைய வாழ்க்கையில் தோற்றுப் போக காரணமாக இருப்பது இந்த மன அழுத்தம் தான்.

சில பேர் இந்த மன அழுத்தத்தின் மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்ள தவறான முடிவுகளை கூட எடுக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதை stress என்று சொல்லுவோம் அல்லவா. அந்த ஸ்ட்ரெஸ் குறைய பௌர்ணமி அன்று சந்திர பகவானை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

மன அழுத்தம் குறையும்போது நம்முடைய மனதில் இருக்கும் குழப்பங்களும் தீரும். சிக்கலான பிரச்சனைகளுக்கு கூட தெளிவான முடிவை எடுக்கக்கூடிய சக்தியைப் பெறுவீர்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும், அதற்கு உண்டான முடிவை போல்டாக எதிர்க்க கூடிய சக்தி உங்களுக்கு வந்து விடும். சரி நேரத்தை கடத்தாமல் பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

மன அழுத்தம் குறைய பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

பௌர்ணமி அன்று மாலை 6:30 மணிக்கு மேல் சந்திர பகவான் உதயமான பிறகு, வெட்ட வெளியான இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். சந்திர பகவானை பார்த்தவாறு நீங்கள் அமர்ந்து 1 டம்ளரில் சுத்தமான தண்ணீரை உங்களுக்கு முன்பாக வைத்து விடுங்கள். பிரகாசமாக வீசும் நில ஒளியில் அமர்ந்து சந்திர பகவானை மனதில் நினைத்துக் கொண்டு, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு ‘ஓம் சந்திர மௌலீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை ரொம்பவும் மெதுவாக உச்சரிக்க வேண்டும். (மெதுவாக என்றால் சத்தத்தை குறைப்பது அல்ல. நீங்கள் உச்சரிக்க கூடிய அந்த மந்திரத்தை நன்றாக இழுத்து ராகத்துடன் சொல்ல வேண்டும்.) சந்திர பகவானின் வெளிச்சத்தில் இருந்து வெளிவரக்கூடிய அந்த நேர் மறை ஆற்றல், நீங்கள் உச்சரித்த மந்திரத்தின் சக்தி உங்கள் முன்பு இருக்கும் ஒரு டம்பளர் நீரில் இறங்கி இருக்கும்.

பிரபஞ்சம் முழுவதும் நிலவு ஒளியின் பிரகாசத்தில் நிரம்பி இருக்கும் அந்த சமயத்தில் மேல் சொன்ன விஷயத்தை செய்துவிட்டு உங்கள் முன்னால் இருக்கும் அந்த தண்ணீரை குடித்து விடுங்கள். அந்த தண்ணீரை பருகுவதன் மூலம் கிடைக்கக்கூடிய பாசிடிவ் எனர்ஜி உங்களுக்கு அடுத்த பௌர்ணமி வரை தங்கி இருக்கும். மன அழுத்தம் குறைந்ததை அந்த நொடி பொழுதிலிருந்து நீங்கள் உணர தொடங்கி விடுவீர்கள்.

- Advertisement -

மாதம் தோறும் வரக்கூடிய பௌர்ணவியில் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், எப்போதும் உங்கள் மனதில் லேசாக இருக்கும். ஸ்ட்ரெஸ் என்ற அந்த மன அழுத்தத்திற்குள் நீங்கள் செல்லவே மாட்டீங்க. வாழ்க்கையே லேசாகிவிடும். அடுத்தபடியாக இன்னொரு பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைத்தவர்கள் இதை செய்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.

பௌர்ணமி நேரத்தில் 6:30 மணிக்கு மேல் கடற்கரைக்கு செல்ல வேண்டும். நிலவு வானத்தில் இருக்கும் சமயத்தில் கடல் அலைகளை பார்த்து, ஐந்து நிமிடம் கரையில் அமர்ந்து மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெறும் ஐந்து நிமிடம் இதை செய்தாலே பல நாட்களுக்கு உங்களுக்கான பாசிட்டிவ் எனர்ஜியை பெற்றுக் கொள்வீர்கள்.

இதையும் படிக்கலாமே: படுக்கையறையில் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தால் உங்களை பிடித்திருக்கும் பீடை, தரித்திரம் விலகி விடும்.

ஐந்து நிமிடத்திற்கு மேல் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் கடற்கரையில் அமர்ந்து நிலவையும் கடல் அலைகளையும் பார்க்கலாம் தவறு கிடையாது. கடற்கரையில் அமர்ந்தும் ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை நிலவைப் பார்த்து உச்சரிக்கும் போது, உங்களை அறியாமலேயே அப்படி ஒரு மன நிம்மதி கிடைக்கும். எவ்வளவு பாரமான மனசாக இருந்தாலும் அப்படியே லேசாகிவிடும். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -