வெங்காயம் தக்காளியே இல்லாம மஸ்ரூம் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க. தாறுமாறா வேற லெவல் டேஸ்டுங்க இது. ரெசிப்பிய மிஸ் பண்ணவே பண்ணாதீங்க.

gravy1
- Advertisement -

வெங்காயம் தக்காளி சேர்க்காமல், ஒரு அசைவ கிரேவி வாசத்தோடு இட்லி தோசைக்கு, சுட சுட சாதத்திற்கு, சைட் டிஷ் வேண்டுமா. அது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியாகவும் இருக்க வேண்டுமா. நாவிற்கு சுவையும் வேண்டுமா. கண்ணை மூடிக்கொண்டு அப்ப சிம்பிளான இந்த கிரேவிய ட்ரை பண்ணி பாருங்க. அவ்வளவு ருசி. சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. அதுவும் வெங்காயம் தக்காளி இல்லாமல், செய்யப் போகின்றோம். வாங்க நேரத்தை கலக்காமல் இந்த புதுவிதமான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் முந்திரி பருப்பு 10, வர மிளகாய் 6 லிருந்து 8 உங்கள் காரத்திற்கு ஏற்ப போட்டு, சுடுதண்ணீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் வர மல்லி – 1 1/2 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், கடுகு – 1/4 ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் பொன்னிறமாக வாசம் வரும் வரை வறுத்து நன்றாக ஆற வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து மிக்ஸி ஜாரில் வறுத்த ஆறிய மசாலா பொருட்கள், தோல் உரித்த பூண்டு பல் – 10, புளி கரைசல் – 2 டேபிள் ஸ்பூன், ஊற வைத்த முந்திரி, வளமிளகாயையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மீண்டும் ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 100 கிராம் அளவு மஸ்ரூம் இரண்டாக வெட்டி அந்த எண்ணெயில் போட்டு லேசாக ஃப்ரை பண்ணி, தனியாக ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதே கடாயில் 2 – ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நெய் – 1 ஸ்பூன் ஊற்றி, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி, வெல்லம் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, சேர்த்து நன்றாக கலந்து விட்டு லேசாக வறுத்து வைத்திருக்கும் மஷ்ரூமை இதில் கொட்டி, நன்றாக கலந்து ஒரு மூடி போட்டு மஷ்ரூமை வேக விடுங்கள். தேவை என்றால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

இந்த கிரேவியில் நாம் கசகசா முந்திரி பருப்பு சேர்த்திருப்பதால் திக்காக கிரேவி நமக்கு கிடைக்கும். இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு, மேலே 1/2 ஸ்பூன் எலுமிச்ச பழச்சாறு கொத்தமல்லி தழைகளை தூவி, சுவைத்து பாருங்கள். உங்களுக்கே இதன் சுவை புரியும்.

இதை ரொம்ப நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. மஸ்ரூம் மூன்றிலிருந்து நான்கு நிமிடத்திற்குள் சூப்பராக வெந்து கிடைத்துவிடும். சுட சுட சப்பாத்தி தோசை நாண், சாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலும் அருமையாக தான் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -