மகாராஷ்டிரா ஸ்டைலில் சூப்பரான உருளைக்கிழங்கு வருவல் 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

poteto-fry
- Advertisement -

ஒரே மாதிரி சுவையில் உருளைக்கிழங்கை செய்தை விட கொஞ்சம் வித்தியாசமான முறையில், ஒரு முறை இப்படி உருளைக்கிழங்கு வறுவல் செய்து பாருங்கள். மகாராஷ்டிரா ஸ்டைல் உருளைக்கிழங்கு வருவல் ரெசிபி உங்களுக்காக. ரசம் சாதம், தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் இவைகளுக்கு தொட்டுக்கொள்ள இந்த உருளைக்கிழங்கு சூப்பரான சைட் டிஷ்ஷாக இருக்கும். பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊற வைக்கும் இந்த ரெசிபியை எப்படி செய்வது.

7 வர மிளகாய்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் ஊரட்டும். அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து, ஊற வைத்த வரமிளகாயை மிக்ஸி ஜாரில் போட்டு, சின்ன நெல்லிக்காய் அளவு  புளி, தோல் உரித்த பூண்டு பல் 5, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதுபோல் அரைத்து அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மீடியம் சைசில் இருக்கும் 3 உருளைக்கிழங்குகளை தோல் சீவி சிறிய சிறிய க்யூப் வடிவத்தில் வெட்டி தண்ணீரில் போட்டு கொஞ்சமாக உப்பு போட்டு, 10 நிமிடங்கள் வேக வைத்து தண்ணீரை வடிகட்டி இந்த உருளைக்கிழங்குகளையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் அடி கனமான ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி, மிதமான தீயில் நன்றாக வதக்கவேண்டும். இந்த விழுதின் பச்சை வாடை நீங்கி எண்ணெய் பிரியும் போது, கொஞ்சமாக உப்பு போட்டு வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இந்த மசாலாவில் கொட்டி நன்றாக கலந்து அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த உருளைக்கிழங்கு, அந்த மசாலாவையிலேயே வறுபட்டு மொறுமொறுவென நமக்கு கிடைக்கும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் வேற லெவல் டேஸ்ட்ங்க. இதில் உருளைக்கிழங்கை முதலில் வேக வைக்கும் போது மட்டும் பக்குவமாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். நிறைய வெந்து உருளைக்கிழங்கு கொழகொழவென மாறிவிட்டால், உருளைக்கிழங்கை வறுபடும் போது க்ரிஸ்பியாக கிடைக்காது.

உங்களுக்கு சிம்பிளான இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாதீங்க. உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. குறிப்பாக வெரைட்டி ரைஸ் கூட இதை தொட்டு சாப்பிட்டு பாருங்க. ருசிக்கு 100% கேரண்டீ.

- Advertisement -