உங்கள் வீடு முச்சந்தியில் இருக்கிறதா? தோஷம் தாக்காமல் இருக்க என்ன செய்வது?

முச்சந்தி அல்லது 4 சந்து இணையும் இடங்களில் வீடு இருந்தால், அதன்மூலம் பிரச்சனைகள் கட்டாயம் வரும் என்று தெரிந்திருந்தும், அந்த இடத்தில் எதற்காக வீடு கட்ட வேண்டும்? தோஷங்கள் தாக்கும் என்று தெரிந்து இருந்தால், தெருக்களில் மூன்று சந்துகள் இணையும் இடம் 4 சந்துகள் இணையும் இடம், வீதிகளின் நேர் குத்தாக இருக்கும் இடம், (குத்துசந்து வீடு என்று சொல்வார்கள் அல்லவா!) இந்த இடங்களிலெல்லாம், வீடு ஏதும் கட்டாமல் அந்த இடங்களை, யாரும் வாங்காமல் காலி இடங்களாக வைத்திருக்கலாம் அல்லவா? இந்த கேள்விகள் நம்மில் பலபேர் மனதில் எழுந்திருக்கும்? இருந்தும் இப்படிப்பட்ட, தோஷங்கள் தாக்கும் இடத்தில் எப்படி வீடு கட்டி குடி போகிறார்கள்? என்ற கேள்விக்கு பதில் இல்லை. என்ன செய்வது? சூழ்நிலை தான் காரணம்.

house

கட்டாயமாக மற்ற இடங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இப்படிப்பட்ட இடங்களுக்கு மதிப்பீடு என்பது குறைவாகத்தான் இருக்கும். விலை மதிப்பீடு என்பது ஒரு பக்கம் இருக்க, வாஸ்து சாஸ்திரத்திலும் மற்ற தோஷங்களும் நம்பிக்கை இல்லாதவர்கள் இப்படிப்பட்ட இடங்களை வாங்கலாம். அல்லது இப்படிப்பட்ட இடங்களில் வீடு கட்டிக் கொள்பவர்கள், அவர்களுக்கு தெரிந்த வாஸ்து நிபுணர்களின் அறிவுரையின்படியும், அவர்களுடைய ஜாதகத்தின் அடிப்படையில், ஜோசியர் கூறியிருக்கும் அறிவுரையின்படியும், வாஸ்து சாஸ்திரப்படி தங்களுடைய வீட்டினை அமைத்துக் கொள்வார்கள். அதில் ஏதும் தவறு இல்லை. இவ்வளவு சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்த்து, இப்படிப்பட்ட இடங்களில் வீடு கட்டிக் கொண்டு சென்றாலும், சில பேருக்கு பிரச்சனைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. இதையெல்லாம் தாண்டி இடப்பற்றாக்குறை காரணமாக தற்போது சுடுகாட்டின் அருகில் கூட வீடு அமைத்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உங்களின் வீடு சொந்த வீடாக இருந்தாலும் சரி. வாடகை வீடாக இருந்தாலும் சரி. இப்படிப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும், சில தோஷங்களையும் சுலபமாக தீர்க்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு வழி உள்ளது. அது என்ன வழி, என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தோஷங்கள் தாக்கும் இடங்களில் உங்களுடைய வீடு அமைந்திருந்தால், தேய்பிறை அஷ்டமி தினத்தில், காவல் தெய்வமான பைரவரை தொடர்ந்து வழிபடவேண்டும். பைரவரை மனதார வேண்டிக்கொண்டு, உங்களுடைய வீட்டின் வெளிப்புறத்தில், 2 மண்டலங்கள் தொடர்ந்து, நான்கு திசைகளிலும் நான்கு அகல் தீபம் ஏற்ற வேண்டும். நான்கு அகல் தீபமும் கிழக்கு பார்த்தவாறு தான் இருக்க வேண்டும். இந்த தீபத்தை முறைப்படி எப்படி ஏற்றுவது என்பதைப் பற்றி பார்ப்போமா? ஒரு மண்டலம் என்பது 48 நாட்களை குறிக்கின்றது.

kaala bairavar

தேய்பிறை அஷ்டமி, பவுர்ணமி, வாஸ்து நாள் இந்த மூன்று தினங்களில் ஏதாவது ஒரு தினத்தை தேர்ந்தெடுத்து அந்த நாளில், தீபம் ஏற்றும் பரிகாரத்தை தொடங்கவேண்டும். முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையில் மஞ்சளை பிசைந்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து, வெற்றிலையின் மேல் வைத்து பிள்ளையாருக்கு, 108 முறை ‘ஓம் கணநாதாரே போற்றி’ என்ற மந்திரத்தைச் சொல்லி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். ‘நீங்கள் தொடங்கும் பரிகாரமானது வெற்றிகரமாக முடிய வேண்டும்’ என்ற கோரிக்கை வைத்து விநாயகரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டியது முதல் கடமை.

- Advertisement -

அதன்பின்பு 4 மண் அகல்தீபம் எடுத்துக்கொண்டு, அதற்கு மஞ்சள் குங்குமத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு, உங்கள் வீட்டின் அமைப்பு எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் சுற்றுச் சுவருக்கு உள் பகுதியிலேயே, நான்கு மூலைகளிலும் இந்த நல்லெண்ணை அகல் தீபத்தை பைரவரை மனதார வேண்டிக்கொண்டு ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை மனதிலேயே உச்சரித்துக் கொண்டு தீபத்தை ஒளிர விடவேண்டும்.

agal vilakku

இந்த தீபத்தை தினம் தோறும் மாலை 6 மணி அளவில், தொடர்ந்து இரண்டு மண்டலங்கள் ஏற்றி வர, வீட்டில் பிரச்சனைகள் குறைவதை கண் கூடாகக் காணலாம். கண்ணுக்குத் தெரியாத தோஷங்களும் தாக்காது. வாஸ்து பிரச்சனையினால் வீட்டில் பிரச்சினைகளும் வராது. வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனை தீர பெரிய பெரிய யாகங்கள் செய்வதற்கு அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது. சுவற்றை இடுத்து மாற்றி மாற்றி அங்குமிங்குமாக கட்டினாலும் வீண் விரையம் தான் ஆகும்.

kaala bairavar

தீர்க்கமுடியாத பிரச்சனை கூட இந்த சுலபமான பரிகாரத்தின் மூலம் இரண்டு மண்டலத்தில் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத்தை இரண்டு மண்டலங்கள் வரைதான் ஏற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களுடைய பிரச்சினை தீர்ந்த பின்பும் கூட தொடர்ந்து ஏற்றுக் கொள்ளலாம். கட்டாயம் அந்த பைரவரே உங்கள் வீட்டுக்கு காவல் தெய்வமாக என்றும் இருப்பார் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வரவுக்கு மீறிய செலவா? இந்த விஷயத்தை கவனித்தால் போதும். பணம் தங்க எளிய வாஸ்து குறிப்பு!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vastu dosha pariharam in Tamil. Muchanthi house. Mutchanthi veedu. Vastu dosha pariharam. Vastu dosh remedies.