பாலக்காடு பக்கம் இந்த பூரி ரொம்ப ரொம்ப ஃபேமஸ். நாம கோதுமை மாவு, மைதா மாவில் தான் பூரி செய்வோம். ஆனால் இந்த பூரியை அரிசி மாவில் செய்யப் போகின்றோம். கூடவே சில மசாலா பொருட்களை அரைத்து போட்டு செய்ய போவதால் இதை சாப்பிட மிக மிக மனமாக இருக்கும். எளிமையான சூப்பரான இந்த சமையல் குறிப்பை யாருமே மிஸ் பண்ணாதீங்க. வாங்க நேரத்தை கலக்காமல் ரெசிபியை பார்க்கலாம்.
ஒரு மிக்ஸி ஜாரை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துருவல் 1/4 கப், மீடியம் சைஸில் இருக்கும் பெரிய வெங்காயம் – 1 தோல் உரித்து நறுக்கியது, சீரகம் – 1/2 ஸ்பூன், பூரிக்கு தேவையான அளவு உப்பு போட்டு இதை விழுது போல நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
2 கப் அளவு அரிசி மாவிற்கு இந்த விழுது சரியாக இருக்கும். இன்னும் கொஞ்சம் கூடுதலாக நீங்கள் மாவு சேர்க்கப்போவதாக இருந்தால், மேலே சொன்ன பொருட்களை கொஞ்சம் கூடுதலாக சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தில் தேங்காயில் இருக்கும் தண்ணீரே போதுமானது. தேவைப்பட்டால் கொஞ்சமாக ஸ்பூன் கணக்கில் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
ஒரு அகலமான பவுலில் 2 கப் அளவு அரிசி மாவு போட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து இருக்கும் விழுதை அரிசி மாவில் ஊற்றி பிசைய வேண்டும். தண்ணீர் தேவைப்படாது. தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இந்த மாவை பூரி மாவு பதத்திற்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பூரியை பூரிக்கட்டையில் வைத்து தேய்க்க முடியாது. ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, அதில் இந்த அரிசி மாவு உருண்டையை வைத்து, மேலே ஒரு ப்ளாஸ்டிக் கவர் வைத்து, அதன் மேலே ஒரு தட்டை வைத்து அழுத்தி எடுத்தால், பூரி தயாராக கிடைக்கும். தட்டை தட்டுவது போல இந்த பூரியை தட்டி எடுத்துகோங்க. (ரொம்பவும் மெலிசா தட்டி எடுக்காதீங்க ஓரளவுக்கு தடிமனாக இருக்க வேண்டும்.)
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். சூடான எண்ணெயில் இந்த பூரியை போட்டு பொரித்தால் சூப்பராக உப்பி வரும். அவ்வளவுதான் ஒவ்வொரு பூரியாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடாகவில்லை என்றால் பூரி பொங்கி வராது.
இதையும் படிக்கலாமே: எப்படி செஞ்சாலும் வெஜிடேபிள் பிரியாணி டேஸ்டா வரலியா? இனி இப்படி செஞ்சு பாருங்க. பெரிய ஹோட்டல்களில் இந்த முறையில் தான் செய்வார்களாம். நாமும் டிரை பண்ணி தான் பாக்கலாமே.
குழந்தைகளுக்கு வெறுமனே இந்த பூரியை கொடுத்தால் கூட அவர்கள் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். தொட்டுக்கொள்ள சென்னா மசாலா, உருளைக்கிழங்கு மசாலா, கிரேவி அல்லது சாம்பார் கூட தொட்டு சாப்பிட்டு கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் இந்த பூரியை ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் ருசி நாக்கை விடாது.