மலச்சிக்கல் நீங்க உதவும் சூச்சி முத்திரை

malasikkal

நாம் உயிர் வாழ நமக்கு உணவு அவசியமாகும். இன்று தினமும் பல புதிய வகையான உணவுகளை மக்கள் உண்ணுகின்றனர் அவை அனைத்துமே உடல் நலத்திற்கோ செரிமாணத்திற்கோ ஏற்றதாக இல்லை. இதன் காரணமாக பலருக்கும் மலச்சிக்கல் ஏற்பட்டு அதனால் அவதியுறுகின்றனர். அதை நீக்குவதற்கான முத்திரை தான் இந்த “சூச்சி” முத்திரை. அதை செய்யும் முறையைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Malasikkal neenga muthirai
Malasikkal neenga muthirai

முத்திரை செய்யும் முறை:

முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். இப்போது உங்கள் இருக்கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களை மட்டும் வெளியே நீட்டி, மற்ற விரல்களை மேலே உள்ள படத்தில் காட்டியபடி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இம்முத்திரையை தினமும் காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் உணவு உட்கொள்வதற்கு அரை மணிநேரம் முன்பாக 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

yoga

பலன்கள்:

- Advertisement -

இம்முத்திரையை செய்வதால் நம் குடலின் செரிமான திறன் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். உடலில் நீர் வறட்சி ஏற்படாது. வயிறு, குடல் சிறுநீரகங்கள் நன்கு செயல்படும். கண்களின் வறட்சி நீங்கி கண்பார்வை தெளிவு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
முதுகு வலி குணமாக முத்திரை

இது போன்ற மேலும் பல யோக முத்திரைகள் மற்றும் சித்தமருத்துவ குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mudra for Malasikkal treatment in Tamil. By doing this Mudra on daily basis one can get away malasikkal problem quickly.