முதுகு வலி குணமாக முத்திரை

muthukuvali-muthirai

எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கும் அதன் அடிப்படை சரியாக இருக்க வேண்டும். அதுபோல ஒரு மனிதன் நன்கு இயங்க அவனது முதுகுத்தண்டு நல்ல நிலையிலிருக்க வேண்டும். தற்போதய உலகில் பலரும் தங்கள் உடலை அதிகம் வருத்திக் கொள்வதன் காரணமாக முதுகுவலி ஏற்படுகிறது. அதை போக்குவதற்கான முத்திரை இதோ.

Back Pain (iduppu vali)

முத்திரை செய்யும் முறை:
முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும்.

இப்போது உங்கள் இடது கையிலுள்ள ஆட்காட்டி விரலின் முதல் கணுவை மடித்து அதன் மீது கட்டை விரலை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் வலது கையிலுள்ள சுண்டு விரல் மற்றும் மோதிர விரலை உங்கள் கட்டை விரலைத் தொட்டுக்கொண்டிருக்குமாறு வைத்துக்கொள்ளுங்கள். இரு கைகளிலும் மற்ற விரல்களை நேராக வைத்துக்கொள்ளவும். இதற்க்கான படம் கீழே உள்ளது.

muthirai

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த முத்திரையை 15 முதல் 20 நிமிடங்கள் காலையிலும் மாலையிலும் பயிற்சி செய்ய வேண்டும்

- Advertisement -

பலன்கள்:
இம்முத்திரையை தொடர்ந்து செய்து வர முதுகெலும்பு மற்றும் நரம்புகளின் வலிகள் நீங்கும். உடலின் எலும்புகள் வலுவடையும். நரம்புகள் வலுப்பெற்று உடலில் சுறுசுறுப்பு மற்றும் உற்சாகம் ஏற்படும். உடல் மற்றும் மன சோர்வு நீங்கும்.

இது போன்ற மேலும் பல யோக முத்திரைகள், தியான முத்திரைகள் , னாய் தீர்க்கும் நாட்டு வைத்திய குறிப்புகள் என பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே:
தலை வலி குணமாக முத்திரை

English overview:
Here we explained about the Mudra to reduce back pain in Tamil. By doing this mudra on regular basis one can get complete relief from back pain and bone problems.