உங்க வீட்டு மல்லி செடி கிலோ கிலோவா மல்லிகை பூ கொடுக்கணுமா? தேங்காயும், மோரும் இருந்தா போதுமே!

flower-parijatham-malli
- Advertisement -

மல்லி செடி வீட்டில் வைத்திருந்தால் அதை ரொம்பவும் சுலபமாக ஆர்கானிக் முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பராமரிக்க முடியும். பெண்களுக்கு மிகவும் பிடித்த இந்த மல்லி மலர் செடி வீட்டில் இருந்தால், மகாலட்சுமியின் அருளும் கிடைப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. இத்தகைய மல்லி செடி பூக்காமல் போய்விட்டதா? உங்க வீட்டு செடியின் கொத்துக்கொத்தா பூக்க என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மல்லிகை மலர் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. அதன் வாசமும், குணமும் ஆளைக் கவரும் அற்புத ஆற்றல் கொண்டது. மல்லிகைச் செடி இருந்தால் சுற்றி இருக்கும், சில கிலோமீட்டர் வரைக்கும் அதன் வாசம் வீச செய்யும். மல்லிகை மணம் மன அமைதியை கொடுக்கும் அற்புதமான வாசம் ஆகும். இந்த மல்லிகை மலர் செடி இருந்தால், அதை சுற்றிலும் ஒரு பள்ளம் போன்ற அமைப்பை உருவாக்குங்கள்.

- Advertisement -

செடியின் வேர்களை சுற்றி இருக்கும் மண் காற்றோட்டமாக தளர்வாக இருக்க வேண்டும். இதனால் ஆக்சிஜன் சுலபமாக கிடைத்து செடியானது நன்கு வளர துவங்கும். ரொம்பவும் இறுக்கமாக மூடி மேடாக வைத்திருக்க வேண்டாம் எனவே பள்ளம் போன்ற அமைப்பை உருவாக்கி வைத்து அதில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாட்டு சாணம் இருந்தால் தெளித்து விடுங்கள். சிறிதளவு சாணத்தை ஒரு பாத்திரத்தில் கலந்து தண்ணீர் ஊற்றி வேரை சுற்றிலும் தெளிக்க வேண்டும். மற்ற பூச்செடிகளை காட்டிலும், மல்லிகை செடிக்கு அதிகப்படியான ஈரப்பதம் தேவை எனவே எப்பொழுதும் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.

பின்னர் வாரம் இருமுறை ஒரு கப் அளவிற்கு தேங்காய் பாலும், ஒரு கப் அளவிற்கு புளித்த மோரும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தயிர் பாக்கெட் வாங்கினால் மீதம் இருக்கும் தயிரை வீணாக கீழே கொட்டுவீர்கள். அதில் தண்ணீர் கலந்து மோராக்கி நன்கு புளிக்க விடுங்கள். இந்த புளித்த மோருடன் சரிசமமான அளவில் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். பின்னர் இதை ஏழு நாட்கள் வரை அப்படியே வெளியில் வைத்து புளிக்க விட வேண்டும். இதில் நுண்ணுயிரிகள் நிறையவே பெருக துவங்கும்.

- Advertisement -

இதை தேமோர் கரைசல் என்பர். தேங்காய் பாலும், மோரும் சேர்வதால் இவ்வாறு கூறப்படுகிறது. ஏழு நாள் கடந்த பிறகு அதிலிருந்து ஒரு கப் அளவிற்கு எடுத்து, அதனுடன் ஐந்து கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். ஒன்றுக்கு ஐந்து என்கிற கணக்கு தான் இதனுடைய முறையான அளவு ஆகும். இந்த தண்ணீரை நீங்கள் மல்லிகை மொட்டுக்கள் விட துவங்கும் அல்லவா? அந்த சமயத்தில் உரமாக ஸ்பிரே செய்ய வேண்டும்.

மொட்டுக்கள் எங்கெல்லாம் துளிர்க்க ஆரம்பிக்கிறதோ, அங்கெல்லாம் இதை நன்கு தெளித்து விட வேண்டும். ஒரு கிளையில் ஒன்று இரண்டு பூக்கள் தான் பூக்கிறது என்றால், இந்த ஒரு கரைசலை நீங்கள் தெளிக்கும் பொழுது ஏழு, எட்டு மொட்டுக்கள் கூட பூக்கும். மளிகை செடி மட்டுமல்லாமல் ரோஜா செடி போன்ற மற்ற பூச்செடிகளுக்கும் இந்த தேமோர் கரைசல் துளிர்விடும் பொழுது மட்டும் வாரம் இருமுறை கொடுத்து வந்தால் அதிகப்படியான பூக்களை வாரி வழங்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -